நியாயவிலைக் கடைகள்: கண்காணிப்பு குழு வருகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

நியாயவிலைக் கடைகள்: கண்காணிப்பு குழு வருகிறது

சென்னை, மே 2- நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம் தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண் காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

தமிழ்நாட்டில் 35 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. 

சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் நடந்த கிராமசபைக் கூட் டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து ஒரு பெண் புகார் கூறினார். ‘நியாயவிலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். இதுகுறித்து விசாரிக்கும்படி அதிகாரிகளுக்கு முத லமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் சில நியாயவிலைக் கடைகளில் பொருட்களை தலைமைச் செய லர் வெ.இறையன்பு 30ஆம் தேதி ஆய்வுசெய்தார். அப்போது, உண வுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமனும் உடன் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, பொருட் களை தரமாக வழங்க வேண்டும் என்று உணவுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது நியாயவிலைக் கடைகளில் தர மான பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்குழு ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முது நிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார் கள்.

மாதம்தோறும் முதல் மற்றும் 3ஆவது திங்கள்கிழமைகளில் இந்த குழு கூடி, நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத் தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல்ஆணையருக்கு அனுப்பு மாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment