தமிழர் தலைவர் ஆசிரியரும், திராவிட மாடல் ஆட்சியும் தமிழர்களின் காப்பரண்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரும், திராவிட மாடல் ஆட்சியும் தமிழர்களின் காப்பரண்!

ஆவடி, மே. 7- ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பகுதி சார்பாக கொரட் டூரில் தெருமுனைக்கூட் டம் நடைபெற்றது. இதில் தஞ்சை இரா. பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

’நீட்’ எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு எனும் மூன்று முக் கியமான தலைப்புகளில் 2-5-2022, திங்கட்கிழமை அன்று மாலை, கொரட் டூரில் தெருமுனைக் கூட் டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. 

நிகழ்வில், மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் பா. தென்னரசு, அமைப்பா ளர் உடுமலை வடிவேல், ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலாளர் க. இளவரசு அனைவரை யும் வரவேற்றுப் பேசி னார். அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ. இராமலிங் கம், மாவட்ட இளைஞ ரணித் தலைவர் வெ.கார் வேந்தன், கொரட்டூர் பெரியார், அண்ணா, கலை ஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகி யோர் முன்னிலை வகித் துப் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் அம்பத் தூர் ஏழுமலை தலைமை ஏற்று தலைப்பை ஒட்டி சில கருத்துகளைப் பேசினார்.

இறுதியாக சிறப்புரை யாற்ற வருகை தந்திருந்த தஞ்சை இரா. பெரியார் செல்வம் உரையாற்றி னார். அவரது உரையில், ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகள், அத னூடே இழந்த மாநில உரிமைகள் மீட்பு பற்றி விரிவாகப் பேசினார். மேலும் தமிழர் தலைவர் 21 நாட்கள், 38 மாவட் டங்கள், 40 கூட்டங்கள், இரண்டு மாநிலங்களில் இதே தலைப்பில் பரப்பு ரைப் பெரும் பயணமாக 4,700 கி.மீ சென்று, ஆயிர மாயிரம் மக்களைச் சந் தித்து வந்துள்ளதை எடுத் துரைத்து, தமிழர் தலை வர் எப்படியெல்லாம் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார் என்பதையும், அதற்குத்தகுந்தபடியே தமிழ்நாடு முதலமைச்ச ரின் சிறப்பான செயல் பாடுகளையும் விளக்க மாக விவரித்தார்.

கூட்டம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க. மாவட் டப் பிரதிநிதி சங்கர் மேடையில் இருந்த அனை வருக்கும் பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார்.

நிகழ்வில், ஆவடி நகரக் கழகச் செயலாளர் இ.தமிழ்மணி, பூவை இளைஞரணித் தலைவர் வெங்கடேசன், பொதுக் குழு உறுப்பினர் பூவை செல்வி, பூவைப் பகுதித் தலைவர் பெரியார் மாணாக்கன், ஜெயந்தி, நதியா, முகப்பேர் முரளி, செல்வி, தாம்பரம் மாவட் டச் செயலாளர் மோகன் ராஜ், திருமுல்லைவாயில் இரணியன், அம்பத்தூர் சிவக்குமார், பெரியார் பெருந்தொண்டர்கள் இளங்கோ, ராஜேந்திரன், அம்பத்தூர் ஆ.வெ. நட ராஜன், ப.க. செயலாளர் முருகேசன், அரும்பாக் கம் தாமோதரன், மதுர வாயல் பகுதித்தலைவர் வேல்சாமி, சரவணன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு உரையைக் கேட்டுச் சென்றனர். இறுதியில் மாவட்ட இளைஞரணித் தலைவர் அம்பத்தூர் கண் ணன் நன்றி கூறி நிகழ்ச் சியை நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment