சென்னை, மே 31- பல இளம் இந்தியர்களுக்கு முதலாம் வகை நீரிழிவு நோய் இருக்கும் நிலையில் இன்றைய காலகட்டத்தில் உயிர் காக்கும் சிகிச்சையாக இன்சுலின் கருதப்படுகிறது.
முதலாம் வகை நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு இன்சு லினைத் தவிர்த்து வேறு ஏதும் மருந்து இப்போது இல்லை. இன்சுலின் கண்டறியப்பட்ட வரலாறு தொடங்கி, இந்தியாவிற்கு அது வந்து சேர்ந்த விதம் மற்றும் அதனால் காப்பாற்றப்பட்ட எண்ணற்ற நபர்களது வாழ்க்கைக் கதைகளின் தொகுப்பாக
மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யத்தின் தலைவர் டாக்டர். வி. மோகன் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னையில் இந்த புத்தகத்தை மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர். து.ராதாகிருஷ் ணன் வெளியிட்டார்.
முதல் பிரதியை, பட்டயக் கணக்கரும் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக முதலாம் வகை நீரிழிவு நிலையோடு வாழ்ந்து வருபவருமான ரோஷன் பெற்றுக்கொண்டார். நீரிழிவு குறித்து பல அரிய தகவல் களை உள்ளடக்கிய இப் புத்தகம், பலருக்கும் உத்வேகமளிக் கும் வகை யில் உள்ளது என்று சுகா தாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
டாக்டர். வி. மோகன் ஆங்கிலத் தில் எழுதி வெளிவந்த சுயவரலாறு தமிழ் மொழியாக்கப் புத்தகத்தை டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் சுதா சேஷையன் வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை, வெங்கடேஷ் வரா மருத்துவ மனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர். சு. தில்லை வள்ளல் பெற்றுக் கொண் டார்.
முன்னதாக இந்நிகழ்வு குறித்து இம்மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் மோ. அஞ்சனா விளக்கமாக எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment