சென்னை, மே 3- தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட சிறு பால் உற்பத்தியா ளர்களுக்கு புதிய தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க மில்கி மிஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காக த்வாரா இ-டெய்ரி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் அது கைகோர்த்துள்ளது. இந்த சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து தினசரி 6 லட்சம் லிட்டர் பாலை மில்கி மிஸ்ட் கொள்முதல் செய்து, பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இந்த கூட்டுமுயற்சி குறித்து மில்கி மிஸ்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கே. ரத்னம் கருத்து கூறுகையில், "த்வாரா இ-டெய்ரி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு () அடிப்படையில் உருவாக்கியுள்ள செயலி, மாடுகளின் தீவன முறைகளை கண்காணிக்கவும், மதிப்பிடவும், சரிசெய்யவும் கூடியது. இது இந்திய பால் உற்பத்தித் தொழிலில் தலைகீழ் மாற்றத்தை கொண்டு வரும். இது நிலையான வருமானத்தை உறுதி செய்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சமூக மேம்பாட்டில் மிகப் பெரிய பங்காற்றும். சிறு பால் உற்பத்தியாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும், பால் பண்ணையை அறிவியல் ரீதியாக நிர்வகிக்கவும், த்வாரா இ-டெய்ரி சொல்யூஷன்ஸுடன் மில்கி மிஸ்ட் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறது என்றார்.
No comments:
Post a Comment