அல்வார், மே 7 சிறுவர்களோடு பைக்கில் மசூதிக் குச் சென்ற இஸ்லா மியரை இரண்டு பேருக்கு மேல் ஏன் வந்தாய் என்று கூறி ரூ.33 ஆயிரம் வசூலித்து அதைப் பெருமையோடு சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர்.
இந்திய அளவில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதில் அரசும் அதிகாரிகளும் துணை போகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. வீர் பிரதாப் என்று பெயர் உள்ள சமூகவலைதளத்தில் 'இந்து புகழ்பக்கம்' (அகில்பாரதில் செலபிரடி சங்) என்ற குழுமத்தில் பதிவொன்றை போட்டுள்ளனர். அதில் "நான் நாள் ஒன்றுக்கு ஒரு தொப்பிக்காரனை(இஸ்லாமியர்) பழிவாங்குவேன், இன்று அவர்களுக்கான சிறப்பு நாளான வெள்ளிக்கிழமையில் அவர்களுக்கு அல்லாவின் பரிசாக ஒன்றைக் கொடுக்க நினைத்தேன், நீண்ட நேரமாக வெளியே சேர் போட்டு உட்கார்ந்துவிட்டேன், அப்போது ஒரு தொப்பிக்காரர்(இஸ்லாமியர்) பைக்கில் வந்தார். அவர் பின்னால் இரண்டு அநாதை துலுக்கச் சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். நல்லவேட்டை! அவர்களை ஓரம் கட்டக் கூறினேன், எல்லா காகிதமும் சரியாக வைத்திருந்தார்கள்.
விடுவேனா? இரண்டு பேர் போகும் வண்டியில் மூன்றுபேர் போனதற்குத் தண்டனையாக ரூ.33 ஆயிரம் சலான் போட்டுவிட்டேன், ஏதோ குளிர்பானம் விற்பவனாம் கதறினான். எனக்கு அவன் கதறல் மகிழ்ச்சியாக இருந்தது. வண்டியை பிடுங்கி வைத்துவிட்டேன். சலான் கட்டிவிட்டு வண்டியை எடுத்துப்போ என்று கூறினேன். இதில் உண்மை என்னவென்றால் அந்த வண்டியை அவன் விற்றால் கூட ரூ.5000த்திற்கு எவனும் வாங்கமாட்டார்கள்" என்று பெருமையோடு எழுதி அந்தச்சலானை படமெடுத்தும் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலிட்டவர்கள் "இதோடு ஏன் விட்டீர்கள் சலானை உடனடியாக கட்டாததால் புல்டோசர் கொண்டு போய் அவனது வீட்டை இடித்திருக்கலாமே, அவர்கள் வீடில்லாமல் இருந்து சாகட்டுமே! என்று பதிவிட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment