சென்னை, மே 4 பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (5.5.2022) தொடங்கி வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் (பிளஸ்-1) வருகிற 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத் தேர்வுகள் வருகிற 6ஆம் தேதி தொடங்கி30ஆம்தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment