6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மே 7- திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதை யொட்டி இன்று (7.5.2022) சட்டப்பேரவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
துளி போன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் சாதனை களை செய்துள்ளோம் என பேசினார். தமிழ்நாட்டு மக்க ளுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் இந்த அவையில் பேசுகிறேன். நான் கலைஞர் அல்ல, அவரைப் போல பேச தெரியாது, எழுத தெரியாது, ஆனால் அவரைப் போல உழைக்க முயன்றேன்.
சமச்சீரான வளர்ச்சியை அடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 29ஆம் எண் வழித்தடப் பேருந்தில் பயணித்து தான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த வழித்தட பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித் தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளி ருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்ச மாகியுள்ளது. மகளிருக்கு பேருந் தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு ரூ.600 முதல் ரூ.1,200 வரை மாதந் தோறும் மிச்சமாகியுள்ளது.
கட்டாய கல்வித் திட்டம்
கரோனா கால உதவித் தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற் றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். 108 அவசர ஊர்தி மூலம் பயன்பெற்றவர்கள் 16.41 லட்சம் பேர். கலைஞர் காப்பீடு திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் 1.34 கோடி பேர். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்கள் 1,24,000 பேர். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 30 லட்சம் பேர். கட்டாயக் கல்வி திட்டத் தின்கீழ் சேர்க்கப் பட்டவர்கள் 56 ஆயிரம் பேர். சமூக பாதுகாப்பு வளைகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணிகள் 96 ஆயிரம் பேர்.
மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு
1.71 லட்சம் மீனவக் குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். ஊரக பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளின் எண்ணிக்கை 14.32 லட்சம் பேர். 68,800 பேர் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கள் மூலம் பணிவாய்ப்பு பெற் றுள்ளனர். 14,83,961 பேருக்கு கடந்த ஓராண்டில் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 63,077 காவலர்கள் ஒருநாள் விடுப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற் றுள்ளனர்.
நடப்பாண்டு ரூ.80 கோடி செலவில் 4,694 கி.மீ. 2தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. 1.85 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கிண்டியில் மருத்துவமனை, அரசு பணிகளில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம், இல்லம் தேடி மருத்துவம் என பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம், மாவட்டங்களில் புத்தக சந்தைகள் என பல திட்டங்கள் தொடங்கப் பட்டன. காவல் ஆணையம், பொருநை அருங்காட்சியகம், மீண்டும் மஞ்சபை இயக்கம் ஆகிய திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன. ஓராண்டில் 70% திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
நகைக்கடன் தள்ளுபடியால்...
நகைக்கடன் தள்ளுபடியால் 22,20,109 பேர் பயனடைந் துள்ளனர். அகவிலைப்படி உயர்வால் 9.32 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு திட்டங்களின் பயன்கள் சென்று சேராத இடமே தமிழ் நாட்டில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப் பாற்றி உள்ளேன். சொன்னதை செய்திருக்கிறோம், சொல்லாத தையும் கடந்த ஓராண்டில் நிறைவேற்றியிருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என் பதே திராவிட மாடல், அதுவே இந்த அரசின் நோக்கம்.
ஆவடியில் நரிக்குறவர் இல்லத்தில் எனக்கு கொடுக்கப் பட்ட உணவு காரமாக இருந் தாலும் அதில் அன்பு வெளிப் பட்டது. கறிக்குழம்பு காரமாக இருந் ததால் தான் கரோனா வர வில்லை என நரிக்குறவர் மக்கள் தெரிவித்தனர்.
சமூக நோய்களில் இருந்து காப்பாற்றும் காரமான அரசு இந்த அரசு.
மக்கள் வைத் துள்ள நம்பிக்கையை எப்படி யாவது காப்பாற்ற வேண்டும் என்பதே எனது கவலை என பேரவையில் முதலமைச்சர் உரையாற்றினார்.
பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
* அரசுப்பள்ளி மாணவர் களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாண வர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும்.
* 6 வயதுக்குட்பட்ட குழந் தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.
* டில்லியைப் போல் தமிழ் நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
ரூ.100 கோடி ஒதுக்கீடு
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்படும்; ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்.
* உலகத்தரத்தில் கட்ட மைப்பு, தொய்வில்லாத தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 6 மாபெரும் இலக்கு அரசுக்கு உள்ளது. நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நமது வேகத்தை குறைக்கிறது.
* தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறை வேற்றப்படும் என முதலமைச்சர் உறுதி.
எந்நாளும் கழக ஆட்சி தான், கலைஞர் ஆட்சி தான் என்று கூறி பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையை முடித்தார்.
No comments:
Post a Comment