அரசுப் பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பயணிகள் மகிழ்ச்சி வரவேற்பு
சென்னை,மே7- தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இன்று (7.5.2022) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் சென்றபோது காரில் இருந்து கிழே இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வழியாக வந்த ஒரு அரசு பேருந்தில் திடீரென ஏறி பயணித்தார்.
முதலமைச்சர் அரசு பேருந்தில் திடீரென ஏறியதால் பேருந்தி லிருந்த பயணிகள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். பேருந்து நடத்துநரிடம் பேருந்து பயணம் விவரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், பெண் பயணி ஒருவரிடம், திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்து கருத்து கேட்டார்.
அப்போது பேசிய அந்த பெண், இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம். இந்த திட்டத்திற்கு உங்களுக்கு நன்றி என கூறினார். அதேவேளை, மகளிர் இலவச பயணத்துக்கான பேருந்துகளின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. அதை உயர்த்த வேண்டும்’ என்றார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த முதலமைச்சர் அடுத்த நிறுத்தத்தில் பேருந்தில் பயணத்தை முடித்து பின்னர் காருக்கு திரும்பினார்.
இதனை தொடர்ந்து காரில் பயணம் செய்து சென்னை மெரினா கடற்கரைக்கு முதலமைச்சர் சென்றடைந்தார். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment