கரோனா நோய்த்தொற்று காரணமாக இரண்டாண்டுகால நீண்ட இடைவெளிக்கு பிறகு திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில், இது பெரியார் திடலா? இளைஞர்களின் கருங் கடலா? என்று பார்ப்போர் வியக்கும் வண்ணம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.
இளைஞர்களுக்கான உற்சாக அறிவிப்பு :
9.4.2022 அன்று ‘விடுதலை' நாளிதழில் ஓர் அறிவிப்பு வெளிவந்தது. 30.4.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரை யாடல் கூட்டம், 90 வயதை தொடவிருக்கும் தலைவர், வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக, மாநில உரிமைக்காக என்னாளும் பிரச்சார பயணம் மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் என்ற இளைஞர்களுக்கான உற்சாக அறிவிப்புதான் அது. இந்த அறிவிப்பு ‘விடுதலை'யில் வெளிவந்த அன்று மாலையே இளைஞரணி பொறுப்பாளர்கள் தங்கள் பொறுப்பிற்கு உட்பட்ட இளைஞரணி தோழர்களோடு தகவல் பரிமாறிக்கொள்ள தொடங்கினர்.
மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கான அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு அஞ்சல், மின்னஞ்சல், வாட்சப் போன்ற அனைத்து வழிகளிலும் மாநில பொறுப்பாளர்கள் முதல் கிளைக் கழக இளைஞரணி தோழர்கள் இல்லத்திற்கே அனுப்பி அழைப்பு விடுக்கப்பட்டது. இன்னும் கூடுதலாக கிட்டத்தட்ட ஒருமாத காலம் பம்பரமாய் சுற்றிச்சுழன்று மாநிலம் முழுவதும் இருக்கும் இளைஞரணி தோழர்களை நேரில் சென்றும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் குறித்து, அதில் தமிழர் தலைவர் தலைமையேற்று உரையாற்றுகிறார் என்பதை வலியுறுத்தி வந்தனர். இப்படி கூட்டம் தொடர்பான தகவல் பரிமாற்றம் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி நடத்திய செம்மை இளைஞர்கள் மத்தியில் பேசு பொருளா னது. அதன் விளைவாக குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டம் சார்பில் தொடர்வண்டியில் முன்பதிவு செய்தும், தனி பேருந்து, சிற்றுந்து, மகிழுந்து போன்றவற்றின் மூலம் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொள்ள தயார் தயார் என்ற செய்தி ‘விடுதலை' நாளிதழில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தது.
மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்ற 30.04.2022 சனிக்கிழமை காலை 4 மணிக்கெல்லாம் தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் அமைந்துள்ள திராவிடர் கழகத்தின் தலைமை நிலையமான பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் இரத்த ஓட்டமாகிய இளைஞர் பட்டா ளம் சங்கமிக்கத் தொடங்கியது. காலை 6,7 மணியளவில் பெரியார் திடலில் விடிந்த இனிய காலைப்பொழுதில் கருமேகம் சூழ்ந்ததுபோல் திரும்பும் பக்கமெல்லாம் கருஞ்சட்டை வீரர்கள், களப்பணியாளர்கள் காட்சியளித்தனர். இரண்டு ஆண்டுகாலம் கரோனா நோய்த்தொற்று காரண மாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதன் விளைவாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து இல்லத்தின் நலன் முதல் இயக்கத்தின் நலன் வரை விசாரித்து உரையாடி மகிழ்ந்திருந்தனர். இக்காட்சி போர்க்களம் சென்று வெற்றிகண்டு நாடு திரும்பிய வீரர்களை மக்கள் நலம் விசாரிப்பதுபோல் அமைந்திருந்தது. பல்வேறு மாவட் டங்களில் இருந்து வந்திருந்த தோழர்கள் பசியாற தலைமை கழகத்தால் 8 மணியளவில் காலை உணவு தயார் செய்து பரிமாறப்பட்டது. உணவருந்திய இளைஞரணியினர் தமிழர் தலைவரை வரவேற்க தயாரானார்கள்.
தமிழர் தலைவர் காலையில் புறப்பட்டு முதல் நிகழ்வாக சென்னை கலைவாணர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு, அந்நிகழ்வை தொடங்கிவைத்து உரையாற்றி விட்டு பெரியார் திடல் நோக்கி புறப்பட்டார். பெரியார் திடலின் வாசலில் இருந்து எம்.ஆர்.ராதா மன்றம் வரை இளைஞரணியினர் இருபுறம் வரிசையாக நின்று ஆசிரி யரை வரவேற்க ஆயத்தமானார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஊர்தி பெரியார் திடல் வாசலை வந்தடைந்தவுடன் விண்ணை முட்டும் இடி முழக்கம், தாரை தப்பட்டை வாத்தியங்கள் முழங்க தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என்று எழுச்சி முழக்கமிட்டு வரவேற்பளித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியரும் வாகனத்தை விட்டு இறங்கி நடைபயணமாக இருபுறமிருந்த இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்தி, உற்சாகப்படுத்தி கூட்ட அரங்கை சென்றடைந்தார்.
கூட்டம் சேர்க்கும் தலைவர்களுக்கு இடையே இளைஞர்களின் வாழ்வை செதுக்கும் தலைவர்
ஆசிரியர் மேடையில் அமரும்வரை இளைஞரணியினர் அமரவுமில்லை, முழக்கம் அடங்கவுமில்லை. தமிழர் தலைவர் ஆசிரியரோடு கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், கழக பொருளாளர் வீ.குமரேசன், கழக பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோர் மேடையில் அமர்ந்து, இதுவரை நடைபெற்ற இளைஞரணியின் பணிகள் குறித்தும், இனிமேல் நடக்க வேண்டிய இயக்க பணிகள் குறித்தும், இளைஞர்களை ஊக்கப்படுத்தியும், உற்சாகப்படுத்தியும் உரையாற்றினர். இறுதியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒன்றுகூடியிருந்த இளைஞர்களை பாராட்டி பேசினார், அப்போது போதை பழக்கம் உடைய வர்கள் எத்தனைபேர் இருக்கிறீர்கள் கை உயர்த்துங்கள் என்றார், கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த 600க்கும் மேற்பட்டோரில் 10 நபர்கள் மட்டும் கை உயர்த்தினர். துணிச்சலாக கை உயர்த்தியதற்காக அவர்களை பாராட்டி விட்டு, பின்பு உங்கள் உடல் நலன் பேணி காக்கப்பட வேண்டும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களில் ஈடுபடாதீர்கள். உடனே அவற்றை கைவிடுங்கள் என்று அவர்கள் தனிமனித ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாட்டு டனும் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கறையுடன் கண்டித்தார்.
சமூக அக்கறை இளைஞர்கள் மனதில் எழவேண்டி, திருமணமாகாதோர் எத்தனைபேர் இருக்கிறீர்கள் என்று கேட்டார் 67 பேர் கை உயர்த்தினர். விதவை மறுமணம், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் எத்தனைபேர் என்று கேட்க அதே 67 பேர் அதற்கும் கை உயர்த்தினர். அவர்களை பார்த்து, நடைமுறை சிக்கல்களை எடுத்து கூறி, வாய்ப்பு வசதிக்கேற்ப ஜாதி மறுப்பு திரு மணமோ, விதவை மறுமணமோ செய்திட முன்வாருங்கள் என்று சமூக அக்கறையோடு உரையாற்றினார்.
கூட்டம் சேர்க்கும் தலைவர்களுக்கு இடையே இளை ஞர்களின் வாழ்வை செதுக்கும் தலைவராக, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு இயக்கப்பணி செய்திடவேண்டும் என்பதை வலியுறுத்தி உணர்ச்சிமிகுந்த உரையாற்றினார்.
புதிய தோழர்கள் பங்கேற்பு:
ஏறத்தாழ 60க்கும் மேற்பட்ட கழக மாவட்டங்களில் இருந்து வருகைபுரிந்திருந்த 450க்கும் மேற்பட்ட இளைஞ ரணி தோழர்கள், மற்றும் அன்று மாலை நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த திராவிடர் கழக தோழர்கள் அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தனர். அதில் திராவிடம் வெல்லும் சிறப்பு கருத்தரங்கம், பெரியா ரியல் பயிற்சி வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டு கழக பணியாற்றி வந்தனர். இவ்வாறு 52 புதிய இளைஞர்கள் கலந்து கொண்டனர். கலந்துரையாடல் கூட் டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களில் 127 பேர் இப்போது தான் பெரியார் திடலை முதன்முதல் பார்ப்பதாகவும், திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை, நினைவிடம், அருங்காட்சியகம், நூலகம், விடுதலை அச்சகம் ஆகிய வற்றை பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினர்.
போற்றுதலுக்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றம்:
கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழங்கங்களை முன்னிறுத்தி ஏப்ரல் 3ஆம் தேதி நாகர்கோயில் தொடங்கி ஏப்ரல் 25 சென்னை வரை 38 மாவட்டங்கள், 2 மாநிலங்களில் 40 கூட்டங்களில் பங்கேற்று 89 வயதிலும் தனது உடல் நலம், கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் இளைஞர் களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 21 நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொண்டு இளைஞர்கள், மாண வர்கள், பொதுமக்கள் என பல்லாயிரம் மக்களை சந்தித்து எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களுக்கு கழக இளைஞரணி சார்பில் வாழ்த் துக்களையும், நன்றியையும் தெரிவித்தும்,
சமூகநீதிக்கு விரோதமான நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசு தலைவருக்கு அனுப்புமாறு தமிழ்நாடு ஆளுநரை திராவிடர் கழக இளைஞரணி வற்புறுத்தியும்,
தலைமை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கழக இளைஞரணியினர் களத்தில் நின்று போராடி தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது என்றும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத பணியை ஊக்கப்படுத்திடவும், இனவுரிமை மீட்புக் களத்தில் போரிடும் வாளாக செயல்படும் “விடுதலைக்கு" 60,000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளைஞரணியினர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை அடைய பாடுபடுவது எனவும்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி, இளைஞரணி அமைப்பை பரவலாக்குதல், தெருமுனைக் கூட்டங்கள், கருத்தரங்குகள், நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தில் பொறியாளர்கள், நியமனத்தில் தமிழர்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து மே 9 அன்று நெய்வேலியில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்,
ஜூன் 4 அன்று சென்னையில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் - மாநாடு,
ஜூலை 16 அன்று அரியலூரில் திராவிடர் கழக இளை ஞரணி மாநில மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக இளைஞரணிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாக 35 வயதுக்குமேல் இளைஞரணியில் சிறப்பாக பணியாற்றி வந்த தோழர்களுக்கு திராவிடர் கழக பொறுப்பு உயர்வு வழங்கிட அவர்கள் இளைஞரணி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, அந்த பொறுப்புகளுக்கு சிறந்த முறையில் கழகப்பணியாற்றிவரும் புதிய இளைஞர்கள் நியமிக்கப்பட்டனர். கூட்டம் நிறைவுபெற்றவுடன் தலைமை கழகத்தினால் மதிய உணவு வழங்கப்பட்டது.
ஹிந்தி எழுத்து அழிப்புக்கு
தார்சட்டியுடன் புறப்படுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஹிந்தி எதிர்ப்பு (ஹிந்தி அழிப்பு) போராட்டக்களம் காண கருப்பு மெழுகு வர்த்திகள், இளைஞரணியினர் தயாரானார்கள். பிற்பகல் 3.30 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் தமிழர் தலை வரிடம் தார்ச்சட்டியையும், பிரசையும் வழங்கி போராட் டத்திற்கான பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் தமிழர் தலைவர் முன்செல்ல அவரை பின்தொடர்ந்து திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் 600க்கும் அதிகமானோர் ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் ஈ.வெ.ரா.சாலை, காந்தி இர்வின் சாலை வழியாக எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி ஹிந்தி எதிர்ப்பு முழக்கமிட்டு நடந்து சென்றனர்.
கழக தோழர்களை தாளமுத்து நடராஜன் நினைவு கட்டடம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அங்கே வந்திருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஊடகங்கள் சார்ந்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு எதற்காக இந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதை விளக்கி, "ஹிந்தி எழுத்தை அழிப்பதன் மூலம் கலாசார, பண்பாட்டு திணிப்பை நாம் எதிர்க்கிறோம்.
இந்த கலாசார திணிப்புக்கு எதிரான போராட்டம் பெரியார் காலத்தில் தொடங்கி இன்று வரை தேவைப் படுகிறது. இந்த மண் காவி மண் அல்ல. பெரியார் மண். இந்த மண் கலாசார பண்பாட்டு திணிப்பை ஒருபோதும் ஏற்காது என்பதற்கு அடையாளமாக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
பெரியார் தொடங்கிய போராட்டம் ஒரு போதும் தோற்றது இல்லை. கல்வித்துறை, ஆட்சித்துறையில் ஹிந் தியை திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இது ஒரு தொடர் போராட்டம் ஆகும். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதில் கூறினார்.
இந்திய ஒன்றியத்தில் உள்ள மற்ற மாநிலங்களும், வேற்று மொழி மக்களும் புரிந்துகொள்ளும் அளவிற்கு ழிஞிஜிக்ஷி போன்ற ஆங்கில ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், போராட் டத்தில் ஈடுபட்ட தோழர்களையும் கைது செய்து எழும்பூர் தமிழ்ச் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண் டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கேயும் மேடையில் கழக தலைவர் தமிழர் தலைவர், கழக துணைத் தலைவர், கழக பொருளாளர் அமர்ந்திட, கழக தோழர்களை உற்சாகப்படுத்த பொதுச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட தோழர்கள் கழகப் பாடல்களை பாடினர்.
பின்னர் 6 மணியளவில் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வரலாற்று சிறப்பாக கைது செய்த காவல் துறையினரே வாகன வசதி ஏற்பாடு செய்து கழக தோழர்களை பெரியார் திடலில் கொண்டுவந்து இறக்கிவிட்டனர்.
அதன் பிறகு வெளியூரில் இருந்து சென்னை வந்திருந்த இளைஞரணி தோழர்கள் தலைமைக் கழகம் வந்தோம், தலைவரை கண்டோம், அவரது தலைமை உரையை கேட்டோம் என்ற மகிழ்ச்சியோடும், தங்களது ஊரில் சென்று அடுத்த கட்ட பணியாக மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய வரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி நெய்வேலி ஆர்ப்பாட்டம், அரியலூர் மாநாடு போன்றவற்றிக்கு இளைஞர்களை ஒன்றுதிரட்டும் பணியை மேற்கொள்கிறோம் என்ற உணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் இரவு பயணம் மேற்கொண்டு இல்லம் திரும்பினர்.
அன்று முழுவதும் இளைஞரணி தோழர்களுடனேயே இயக்க தலைவர் பயணித்தார் என்பது இளைஞரணிக்கான இன்னும் கூடுதல் சிறப்பு.
No comments:
Post a Comment