கடத்தல் பொருளான கடவுள்கள்- மீட்டது காவல்துறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

கடத்தல் பொருளான கடவுள்கள்- மீட்டது காவல்துறை

சென்னை,மே 6- மாமல்லபுரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, ரூ.2.50 கோடி மதிப்பிலான 3 உலோக கடவுளர் சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத் தில் தொன்மைவாய்ந்த புராதனப் பொருள்கள், சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந் நிலையில், அங்குள்ள தனியாருக்குச் சொந்த மான கலைப்பொருட்கள் விற்பனை நிறு வனத்தில், வெளிநாடுகளுக்கு கடத்திச் செல் வதற்காக தொன்மையான உலோக கடவுளர் சிலைகள் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில்,  காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் கண் காணிப்பாளர் அசோக் நடராஜன் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மாமல்லபுரத்தில் உள்ள நிறுவனத்தில் தனிப்படை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடு களுக்கு கடத்திச் செல்வதற்காக, உலோகத் திலான நின்ற நிலையில் உள்ள பார்வதி அம்மன் சிலை (உயரம்- 97 செ.மீ. அகலம்- 23 செ.மீ. எடை- 26 கிலோ 400 கிராம்), அமர்ந்த நிலையில் உள்ள பார்வதி அம்மன் சிலை  (உயரம்- 32 செ.மீ. அகலம்- 20 செ.மீ. எடை- 8 கிலோ 400 கிராம்), நடனமாடும் சிவன் சிலை (உயரம்- 35 செ.மீ. அகலம்-26 செ.மீ. எடை-7 கிலோ 500 கிராம்) ஆகிய 3 புராதன சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. 

இதையடுத்து, 3 சிலைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த சிலை களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், தமிழ்நாட்டில் உள்ள பழைமை வாய்ந்த கோயி லில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை யினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

இதையடுத்து, கோயிலில் கடவுளர் சிலைகள் திருடுபோனது தொடர்பான வழக்கு களைக் காவல்துறையினர் ஆராய்ந்து வரு கின்றனர். தற்போது மீட்கப்பட்டுள்ள கடவுளர் சிலைகளின் மதிப்பு ரூ.2.50 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். சிலை கடத்தல் பின்னணியில் இருப்ப வர்கள் யார் என்பது குறித்து காவல் துறை யினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்ல விருந்த சிலைகளை மீட்ட, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தனிப்படை காவல் துறை யினரை தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டினார்.

No comments:

Post a Comment