விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, மே 5 காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப் படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

காவல்நிலையங்களில் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்கள் காவலர்களால் தாக்கப்படுவது குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 நபர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரி ழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந் தப்பட்ட காவலர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து சமீபத்தில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங் களில் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், குறிப்பாக, காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக அழைக்கப் படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று விஜய லட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர். 

மேலும் புலன் விசாரணையில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத் துவதாக புகார்கள் வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். காவல் நிலையம் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் வந்தால் நீதிமன்றம் கண்மூடி இருக்காது என்றும், ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment