மருத்துவ உலகில், புற்று நோய் கட்டியை கதிர் வீச்சால் கரைக்கும் உத்திதான் இன்று வரை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.இதன் பக்க விளைவுகள் மிகவும் வேதனை தரக்கூடியவை. குறிப்பாக சிறுவர் - சிறுமியருக்கு பெரும் வலியைத் தருபவை. இதற்கு மாற்றாக 'அல்ட்ரா சவுண்டு' எனப்படும் அதீத ஒலியை வைத்து கட்டியை கரைக்க முடியுமா என்று அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.
அதன் பலனாக, அதீத ஒலிக் கருவியையும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் இணைத்து போரிட்டால், கட்டிகளைக் கரைக்க முடியும் என சிகாகோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் அதீத ஒலிக் கருவியைக் கொண்டு, புற்றுநோய் கட்டியின் திசுக்கள் மீது துல்லியமாக ஒலியை செலுத்த முடியும்.
அப்படி செலுத்தும்போது, திசுக்கள் குலைக்கப்பட்டு நுண் காற்றுக் குமிழ்கள் உருவாகி மறைகின்றன. இதனால், புற்று நோய் கட்டியின் வளர்ச்சி வேகம் மட்டுப்படுகிறது.
பின், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் துண்டப்படுகிறது. இதனால், அல்ட்ரா சவுண்டு கருவி மூலம், பாதிக் கட்டியை குலைத்து விட்டாலே, மீதத்தை நோய் எதிர்ப்பு அணுக்கள் துண்டப்பட்டு, கட்டியை கரைத்துவிடுகிறது.
எலி மீதான சோதனைகளில் அல்ட்ரா சவுண்டு மற்றும் நோய் எதிர்ப்பு அணுக்கள் கூட்டாக செயல்படுவதை சிகாகோ விஞ்ஞானிகள் கண்டு வியந்துள்ளனர்.என்றாலும், கதிரியக்கமில்லாத புற்று நோய் சிகிச்சைக்கு, அல்ட்ரா சவுண்டு சிகிச்சை துவக்கப்புள்ளியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment