சென்னை, மே 4- இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலை யில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறி வித்து இருந்தேன்.
இதற்காக ஒன்றிய அரசின் அனு மதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பிவைக்கப் பட உள்ளன.
உதவி செய்ய வேண்டிய தருணம்
இந்த சூழ்நிலையில் வாடும் மக்க ளுக்கு உதவிடும் வகையில் நல்லெண் ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன் புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பிவைக்கப் படும் என்பதை தெரிவித்துக்கொள் கின்றேன். நன்கொடை வழங்க விரும்புவோர், மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கலாம்.
மின்னணு பரிவர்த்தனை
அதாவது, https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தலைமைச் செயலக கிளை, சென்னை-600 009, சேமிப்பு வங்கி கணக்கு எண் 117201000000070, அய்.எப்.எஸ்.சி. குறியீடு IOBA0001172, சி.எம்.பி.ஆர்.எப். பான் எண் AAAGC0038F என்ற மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்கலாம். வெளிநாட்டு பங்களிப்பா ளர்கள், ஷிப்ட் குறியீடு IOBAINBB001, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை என்ற மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை அளிக்கலாம்.
விவரங்கள் என்ன?
இ.சி.எஸ். மூலம் இணைய வழியில் தொகையை அனுப்பும் பங்களிப் பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும், அதிகாரபூர்வ ரசீதை அனுப்புவதற்கும் சில விவரங் களை வழங்க வேண்டும்.
அதாவது, பங்களிப்பாளரின் பெயர், பங்களிப்பு தொகை, வங்கி மற்றும் கிளை, பணம் அனுப்பும் தேதி, பரிவர்த்தனை குறிப்பு எண், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அல்லது கைப்பேசி எண் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.
வருமான வரி விலக்கு உண்டு
யு.பி.அய். - வி.பி.ஏ. அய்.டி.: tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc.போன்ற பல்வேறு மொபைல் செயலிகள் மூலமும் நன்கொடை வழங் கலாம். காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்பு வோர், அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதி (மு.பொ.நி.நி) துறை, தலைமை செயலகம், சென்னை 600 009, தமிழ்நாடு, இந்தியா என்ற முக வரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலை யாகவோ அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட் டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் களிடமும் வழங்கலாம்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80 ஜி-ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. ரூ.1 கோடி உதவி
இந்த வேண்டுகோள் வெளியான சில மணித்துளிகளில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களு டைய ஒரு மாத ஊதியத்தை வழங்கு வார்கள் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிதி உதவி வழங்க வேண்டுகோள் விடுத்ததோடு மட்டுமல்லாமல், இலங்கையில் வாடும் மக்களுக்கு, முதல் ஆளாக உதவி செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு நிதி உதவி கணக்கை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.
அறிக்கை
இதுதொடர்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது:-
“அற்றார் அழிபசி தீர்த்தல் அக்தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி”
என்பது வள்ளுவர் வாக்கு.
“உலகம் உண்ண உண்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.
எல்லைகளை கடந்து உலக மாந்தராக சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். அந்தவகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்ப உள்ளோம்.
மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக தி.மு.க.வின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதல மைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவா ரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும் தி.மு.க.வின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment