சென்னை, மே 3 - விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் இத யத்தை, வேலூரில் இருந்து 84 நிமி டத்தில் சென்னையில் உள்ள வருக்கு மாற்ற அவசர ஊர்தி மூலம் கொண்டு வந்த ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவிக் கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மதனஞ்சேரி குந்தன்வட்டத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 21). கட்டடத் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனம் மரத்தின் மீது மோதிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவ ருக்கு வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது பெற் றோர் தனது மகனின் உடல் உறுப் புகளை கொடையாக அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து மருத்துவர்கள், இளைஞரின் உட லில் இருந்து முக்கிய உறுப்புகளை அகற்றினர். இதில் அவரது இதயம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் 41 வயது ஆண் நோயாளிக்கு கொடையாக கொடுக்க தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன.
இதையடுத்து 1.5.2022 அன்று மாலை 3.10 மணிக்கு வேலூர் மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த தினகரனின் இதயத்தை அதற்கான சிறப்புப் பெட்டியில் வைத்து அவசர ஊர்தி சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த அவசர ஊர்தியை சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் வேல்முருகன் என்பவர் ஓட்டினார். தொடர்ந்து இந்த இதயம் வேலூரில் இருந்து வருவது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவலர் களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேலூரில் இருந்து அவசர ஊர்தி வரும் பகுதிகளான வானகரம், கோயம்பேடு, அரும் பாக்கம், அமைந்தகரை, சேத்துப் பட்டு வழியாக சென்னை கிரீம்ஸ் சாலை வரை தேவையான போக் குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவ லர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய் திருந்தனர். இதையடுத்து வேலூரில் இருந்து புறப்பட்ட அவசர ஊர்தி 84 நிமிடத்தில் அதாவது மாலை 4.34 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையை வந்தடைந்தது.
No comments:
Post a Comment