நூறாண்டு புகழ் மணக்கும் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகள் பூத்துக் குலுங்குவது கண்டு, உண்மையான உணர்வுள்ள உலகத்துப் பெருமக்களும், எமது கொள்கை உறவுகளும் பூரித்து மகிழும் வேளையில், நமது மகிழ்ச்சியை மேலும் பெருக்கியுள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகரான பெரு மரியாதைக்குரிய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். நம் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களது நூறாண்டு தாண்டிய வாழ்வின் தொண்டறத்தை சிறப்பித்து, அரசே அங்கீகாரம் வழங்கியது போன்று சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சிலை (சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களால் - திராவிடர் கழக மகளிர ணியினரால் வைக்கப்பட்டு - திறக்கப்பட்ட சிலை -1.10.1994) உள்ள மற்றொரு வீதியான 'வேனல்ஸ் சாலை' பெயர் மாற்றம் செய்யப் பட்டு (அரசு ஆணை (4ப) எண்:07) 'அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை' என்று பெயர் வைக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது தந்தை பெரியாருக்கும், அன்னை மணியம்மையாருக்கும் 'மு.க.ஸ்டா லின் அரசு' அளித்த அன்புக் காணிக்கை!
நூற்றாண்டை தமிழ்நாடு அரசு கொண் டாடாத குறையை நீக்கிய அருஞ்சாதனை!
இதற்கு முழுக் காரணமான நமது முதலமைச்சர் அவர்களுக்கும், நகராட்சித் துறை அமைச்சர் செயல்மிகு திரு. கே.என். நேரு அவர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நமது நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறோம்.
இது முதலாண்டின் துவக்கத்தில் தி.மு.க. மகுடத்தில் பதித்த மற்றுமோர் ஒளி முத்து ஆகும்.
நன்றி! நன்றி!!
No comments:
Post a Comment