எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது

நாகப்பட்டினம், மே 3 - நாகை மாவட்டம் கோடியக்கரை கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் 1.5.2022 அன்று கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது கோடியக்கரைக்கு அருகே வெள்ளபள்ளம்- நாலுவேதபதிக்கு இடையே, இலங் கையை சேர்ந்த ஒரு விசைப்படகு நிற்பது கடற்படையின ருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் ரோந்து கப்பலில் சென்று அந்த விசைப்படகை பார்த்தபோது, அதில் இலங் கையை சேர்ந்த 6 மீனவர்கள் இருந்தனர். அவர்களிடம் விசா ரணை நடத்தியதில், எல்லை தாண்டி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து மீனவர்கள் 6 பேரையும், இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.  


No comments:

Post a Comment