இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ஏதிலியராக இராமேசுவரம் வந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ஏதிலியராக இராமேசுவரம் வந்தனர்

ராமேசுவரம், மே 3- இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், ஏதிலியராக ராமேசுவரத்துக்கு படகில் வந்தனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரண மாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் அவ்வப்போது, படகு மூலம் தப்பி தமிழ்நாட்டுக்கு ஏதிலியராக வருகின்றனர்.

இலங்கையில் இருந்து ஒரு பிளாஸ்டிக் படகில் ஒரு ஆண், 2 பெண்கள், 2 குழந்தைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், நேற்று முன்தினம் நள்ளிரவில் இராமேசு வரம் சேரான்கோட்டை கடற்கரை யில் வந்து இறங்கினார்கள்.

இது பற்றி அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற கடலோர காவல் துறையினர் அந்த 5 அகதிகளையும் மீட்டு, விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர். கியூ பிரிவு மற்றும்ஒன்றிய-மாநில உளவுப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசா ரணை நடத்தினார்கள்.

இதுவரை 80 பேர்

விசாரணையில், அவர்கள் இலங்கை வவுனியா மாவட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த தயா ளன்(வயது 27), இவரது மனைவி லதா(26), குழந்தைகள் தன்ஷிகா(6), 2 மாத கைக்குழந்தை மற்றும் உறவினர் பெண் ராஜலட்சுமி(56) என்பதும் தெரியவந்தது. விசார ணைக்கு பின்னர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.  இதுவரையிலும் கடந்த 1 மாதத்தில் மொத்தம் இலங் கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு 80 பேர் ஏதிலியராக வந்துள்ளனர்.

இதுதொடர்பாக தயாளன், லதா, ராஜலட்சுமி ஆகியோர் கூறியதாவது:-

இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக அரிசி கிலோ 300 ரூபாய்க்கு விற்கிறது. குழந்தைகளுக்கான பால் பவுடர் ஒரு டப்பா 1000 ரூபாய் என எல்லா பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. கூடுதல் விலை கொடுத்தாலும் குழந் தைகளுக் கான பால் பவுடர் கிடைப்பது இல்லை. மருந்து, மாத்திரைகளும் சரிவர கிடைப்பது கிடையாது.  அங்குள்ள விலைவாசி உயர்வால் குழந்தைகளுடன் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ளவே அங்கி ருந்து படகு மூலம் தப்பி வந்

தோம். இவ்வாறு அவர்கள் உருக்க முடன் கூறினார்.


No comments:

Post a Comment