சென்னை, மே 3 - குரூப் 4 தேர்வுக்கு 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் ஒரு பதவிக்கு 296 பேர் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உரு வாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) குரூப் 4 பதவியில் விஏஓ 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 3) 1024 என 7138 இடங்கள், வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் என மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வுகள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. மேலும் 81 இடங்கள் விளை யாட்டு வீரர்களுக்கான கோட்டா அடிப் படையில் நிரப்பப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் விண்ணப்பித்தல் தொடங் கியது. சுமார் 30 நாட்கள் விண்ணப்பிக்க கால அவ காசம் வழங்கப்பட்டது.
இந்த காலஅவகாசம் 28.4.2022 நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
இதில் லட்சக்கணக்கோர் விண்ணப் பித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவியில் புதிய சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வுக்கு இவ்வளவு பேர் விண்ணப்பித்தது இல்லை.
ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு அதிகபட்சமாக 20.76 லட்சம் பேர் தான் விண்ணப்பித்திருந்தனர்.
இந்த சாதனை தற்போது முறியடிக்கப் பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து குரூப் 4 தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும். இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment