யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 31- யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித் துள்ளார்.
இது குறித்த அவரின் ட்விட்டர் பதிவில் "யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்காகப் பணியாற்றவுள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்! சுவாதிசிறீ உள் ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குச் சிறப்பு வாழ்த் துகள்! வெற்றி பெறாதவர்களுக்கு வெற்றிக்கனி எட்டும் தொலைவில்தான் உள்ளது!" என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை, மே 31 அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான தேர்வு முடிவுகள நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 685 பேர் வெற்றி பெற்று சாதனை படைத் துள்ளனர். முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்து அசத்தியுள்ளனர். தமிழ்நாடு அளவில் கோவை மாணவி முதல் இடம் பிடித்துள்ளார்.
மத்திய அரசு பணியா ளர் தேர்வாணையம் (யு பிஎஸ்சி)ஆண்டு தோறும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள் ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2021ஆம் ஆண் டுக்கானது) 685 பதவி களை நிரப்பு வதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளியிடப் பட்டது. மார்ச் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப் பட்டது. இத்தேர்வுக்கு 10,93,984 பேர் விண்ணப் பித்திருந்தனர்.
இதில் சுமார் 5,08,619 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட னர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அக் டோபர் 10ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி முதல்நிலை தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட் டது.
இத்தேர்வில் இந்தியா முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஜனவரி 7, 8, 9, 15, 16ஆம் தேதிகளில் நடந்தது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் 1,824 பேர் நேர்கா ணலுக்கு அழைக்கப்பட் டனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி நடந்தது. நேர்காணல் முடிவடைந் ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று பிற்பகலில் வெளியிட்டது.
685 பேர் தேர்ச்சி
இதில் அகில இந்திய அளவில் 685 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்திய அளவில் ஸ்ருதி சர்மா முதலிடத்தையும், அன்கீட்டா அகர்வால் 2ஆவது இடத்தையும், காமினி சிங்லா 3ஆவது இடத்தையும், 4ஆவது இடத்தை அய்ஸ்வர்யா வர்மாவும் பிடித்து அசத் தியுள்ளனர். தமிழ்நாட் டில் கோவை மாவட் டத்தை சேர்ந்த சுவாதிசிறீஎன்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அள வில் 42ஆவது இடத்தை பிடித்துள்ளார். மொத் தத்தில் பொதுப்பிரிவில் 244 பேரும், பொருளாதா ரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர் 73 பேரும், பிற்படுத்தப்பட்டவர்கள் 203 பேரும் தேர்ச்சி பெற் றுள்ளார்கள்.
காத்திருப்போர் பட்டியல்
யுபிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் 127 பேர் காத்திருப்போர் பட் டியலில் வைக்கப்பட்டு ள்ளனர். இடஒதுக்கீட் டுப் பிரிவினர், பொது பட்டியலில் தேர்வாகி பதவிகளை தேர்வு செய் யும் பட்சத்தில், காலியாக இருக்கும் பணியிடங்க ளுக்கு ஆட்கள் நியமிக்கப் படுவார்கள். 80 பேர் இரண்டாவது இருப்பு பட்டியலில் வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித் துள்ளது.
அய்ஏஎஸ் அதிகாரியின் மகள் வெற்றி
சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழ்நாடு அரசின் பொதுத் துறை செயலாளர் டி.ஜெகநாதனின் மகள் சத்ரியா கவின் 244 ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள் ளார். அவருக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு அய்ஏ எஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment