குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை - தாக்கீது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை - தாக்கீது

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை, மே 30 ஓராண்டு காலத்தில் 48 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி பன்னாட்ட புகையிலை எதிர்ப்பு தினமாக கடை பிடிக்கப்படுகிறது. இதை யொட்டி சென்னை, சமூக ஆன்மிக அமைப்பான பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் அய்ஸ்வர்ய விஷ்வ வித்யால யாவும் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையும் இணைந்து ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நடைபயணம் நிகழ்ச்சி யை இன்று நடத்தின.

இதனை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மெய்யநாதன் மற்றும் டாக்டர் ரேலா இன்ஸ் டியூட் அன்ட் மெடிக்கல் சென் டரின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நடைபயணம் பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் துவங்கியது. இதில் பல்வேறு வயதைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புகை யிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியதோடு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.

நிகழ்ச்சியில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசும்போது, தமிழ்நாட்டை போதை பொருள்கள் இல்லாத மாநில மாக மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார் .100% போதை பொருட்கள் இல் லாத மாநிலமாக இருக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த வகையில் போதைப் பொருட்கள் விற்பதை அரசு தடை செய்துள்ளது. 

இதுதொடர்பாக மூவாயிரத்துக்கு மேற்பட்ட கடை களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், உலக புகை யிலை நாளை முன்னிட்டு, போதை ஒழிப்பிற்கு விழிப்பு ணர்வு பேரணி தொடங்கப் பட்டுள்ளது.

2013 மே முதல் குட்கா பான் மசாலா உள்ளிட்ட பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டு,  ஓராண்டு காலத்தில் மட்டும் 4.8 கோடி மதிப்பில் 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக கூறி னார். 

மேலும், 36 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் பிரத்யேக மறுவாழ்வு சிகிச்சை மய்யங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

விதிகளுக்கு புறம்பாக குட்கா, பான் மசாலா விற்ற 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை தாக் கீது வழங்கப்பட்டுள்ளது. 

மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப் பினர்கள் வேளச்சேரி  மவு லானா,  வாழ்வு ரிமை கட்சி தலைவர்  வேல் முருகன், ரேலா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் இளங் குமரன் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment