என்.எல்.சி. பணி நியமனப்பட்டியல்: 300 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

என்.எல்.சி. பணி நியமனப்பட்டியல்: 300 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்வு

நிலக்கரித்துறை அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

மதுரை, மே 6  என்.எல்.சி. பணி நியமனப் பட்டியலில் உள்ள 300 பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்வு  செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அமைச் சருக்கு, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதி யுள்ளார். 

ஒன்றிய நிலக்கரித்துறை அமைச் சர் பிரகலாத் ஜோஷிக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு.வெங் கடேசன் எழுதி யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: 

நெய்வேலி அனல் மின் கழகத்தில் 300 பட்டதாரி நிர்வாக பயிற்சி பொறியாளர் நியமனங் களில் முன்னறிவிப்பின்றி கேட் மதிப் பெண்களை தேர்வுத் தகுதியாக மாற்றியதை கண்டித் தும், அதனால் இந்த தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் ஏற்கனவே என்எல்சி தலைவர் ராகேஷ் சர்மாவிற்கு கடிதம் எழுதி இருந்தேன்.

இதனையொத்த நிறுவனங் களில் தேர்வுத்தகுதி குறித்து முன் னறிவிப்பு தந்து தேர்வர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. 

2018இல் இதே என். எல்.சி.யில் கூட கேட் மதிப்பெண் தகுதி ஆக்கப் பட்டபோது, அறிக்கை உரிய அவகாசத்தோடு செப். 2017லேயே வெளியிடப்பட்டது. 

இம்முறை இங்கேயும் உரிய முன்னறிவிப்பு தந்திருந்தால் விருப்பமுள்ள தேர்வர்கள் கேட் தேர்வை எழுதி இருப்பார்கள்.

இப்படி முன்னறிவிப்பின்றி தேர்வு தகுதியை மாற்றியது அநீதி, சம வாய்ப்பை மறுப்பது எனச் சுட்டிக் காட்டி இருந்தேன்.

 மேலும் இப்பதவிக்கான நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் இறுதி தேர்வுப் பட்டியலில் இடம் பெறுவது அரிதாகி வருகிறது எனக் கவலையையும் தெரிவித்து, ஒரு குறிப்பிட்ட சதவீதம் தமிழ் நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு வழங்கப்பட கோரி இருந்தேன். தற்போது 300 பேர் கொண்ட நியமன பட்டியல் வெளியிடப் பட்டு விட்டது. 

அப் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந் தவர் ஒரே ஒருவர்தான் இடம் பெற்றுள் ளார். எனவே, இந்த தேர்வு முறையை நிறுத்தி, உரிய அவகாசத்துடன் தேர்வுத்தகுதி களை அறிவித்து புதிய நியம னங்களை மேற்கொள்ள உத் தரவிட வேண்டுகிறேன். 

இவ்வாறு தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment