காஞ்சிபுரம், மே 31 கடந்த 3 மாதங்களில் 1029 வழக்குகள் பதியப்பட்டு அதில். குடும்ப பிரச்னை சம்பந்தமாக 700 வழக்குகள் உள்பட 900 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன் முறைகள், வன்கொடுமைகள் தொடர்பான புகார்கள், வழக்குப்பதிவு மற்றும் நடவடிக்கைகள் குறித்த விபரம், முதியோர் நலன் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள், தீர்வு மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம், ஒருங்கி ணைந்த சேவை விவரம் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம், ஆணைய தலைவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மனுக்களை ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை குறைக்க பள்ளியில் வைக்கப்படும் புகார் பெட்டிகளில் உள்ள புகாரை பள்ளி ஆசிரியர் தவிர்த்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மூலம் எடுத்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.பின்னர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடும்ப பிரச்சினை வழக்குகளில் கவால்துறையினரின் விசாரணை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மகளிர் ஆணை யத்தில் குடும்ப பிரச்னை, வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம், 2ஆம் திருமணம், மூத்த குடிமகனுக்கான பாதுகாப்பு உள்பட பல மனுக்கள் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறது, அதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சமூக நலத்துறைக்கு அனுப்பு கிறோம். அதன் விசாரணை முடிவுகள் மீண்டும் எங்களது ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அது குறித்த ஆய்வுகளும், இந்த கூட்டத்தில் பேசப்பட்டது, நாங்கள் பொறுப்பேற்ற 3 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 1029 வழக்குகள் பதியப்பட்டு 900 வழக்குகள் முடித்து வைக்கப் பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பானதாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது தமிழ்நாடு முதல்வரின் குறிக்கோளாக உள்ளது.தற்போது குடும்ப பிரச்சினை சம்பந்தமாக 700 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை வழக்குகள், தற்போது அதிகரித்துள்ளதால் அதற்கான விழிப் புணர்வுகளை, பெண்களுக்கு ஏற்படுத்த தொடர் நடவடிக் கைகள் எடுக்கப்படுகிறது. குடும்ப பிரச்சினைக்கு தனியாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சட்ட வல்லுநர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என இந்த ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய் துள்ளது என்றார்.காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment