நேபாள விமான விபத்து : 22 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

நேபாள விமான விபத்து : 22 பேர் உயிரிழப்பு

காட்மண்ட்,மே30- நேபாளத் தில் 22 பேருடன் விபத்துக் குள் ளான விமானத்தைக் கண்டு பிடித்த மீட்புக் குழுவினர் இது வரை 14 சடலங்களை மீட்டுள் ளனர். விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மருத் துவமனைக்கு உடற்கூராய்வுக் காகக் கொண்டு செல்லப்படவுள் ளன. அதில் இந்தியர்களின் சட லங்கள் இருக்கின்றனவா என்று அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இது குறித்து நேபாள சிவில் விமானப் போக்குவரத்து செய்தி தொடர்பாளர் தியோ சந்திர லால் கார்ன், " விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துப் பகுதிக்கு கூடுதலாக மீட்புப் படையினர் அழைத்துச் செல்ல முடியாத அளவிற்கு அங்கு மோசமான வானிலை நிலவுகிறது" என்று கூறினார்.

முன்னதாக நேற்று(29.5.2022) தாரா ஏர் நிறுவனத்தின்  சிறிய விமானம், தலைநகர் காத்மாண் டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக் ராவி லிருந்து வட மேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம் சோம் நக ருக்கு காலை 9.55 மணியளவில் புறப் பட்டது. நான்கு இந்தியர்கள், சில ஜப்பானியர்கள் உட்பட 19 பயணி களை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுப் பாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப் பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

14 சடலங்கள் மீட்பு: இந் நிலையில் இன்று காலை விபத்து பகுதியை மீட்புக்குழு கண்ட றிந்தது. சோனஸ்வரே மலையில் தசாங் 2 எனுமிடத்தில் நொறுங் கிய விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. 

இந்நிலையில் இது வரை விபத்துப் பகுதியிலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியர்களின் சட லம் இருக்கிறதா என அடை யாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விமானத்தின் கருப்புப் பெட் டியை தேடும் பணியும் நடை பெற்று வருகிறது.


No comments:

Post a Comment