பெங்களூரு, மே 5- பெங்களூருவில் நடைபெற்ற வெள்ளிக்கோளைப் பற்றிய ஆராய்ச்சி படிப்பு நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ் சோம்நாத் கூறுகையில், "வீனஸ் திட்டம் உருவாக்கப் பட்டுவிட்டது, ஒரு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, திட்டத்திற்கான செலவு அடையாளம் காணப்பட்டுள்ளது" என்றார்.
ஏற்கெனவே, நிலவு மற்றும் செவ்வாய் கோளிற்கு வெற்றி கரமாக விண்கலங்களை அனுப்பிய பிறகு, இஸ்ரோ தற்போது வெள்ளிக் கோளைச் சுற்றி வர விண்கலத்தை தயார் செய்து வருகிறது.
சூரியக் குடும்பத்தின் வெப்பமான கோளான வெள்ளிக் கோளின் மேற்பரப்பிற்குக் கீழே என்ன இருக்கிறது என்பதை அறியவும், அதைச் சூழ்ந்துள்ள கந்தக அமில மேகங்களின் கீழ் உள்ள உண்மையை அவிழ்க்கவும் இந்த திட்டம்
உதவும்.
அடுத்த ஆண்டு டிசம்பர் மாத காலகட்டத்தில், பூமியும் அண்டை கோளான வெள்ளி கோளும் ஒரே நேர்கோட்டில் வர சாத்தியக்கூறுகள் உள்ளன.
அப்போது விண்கலத்தை குறைந்தபட்ச அளவு உந்துசக்தியைப் பயன்படுத்தி வெள்ளிக் கோளின் சுற்றுப் பாதையில் வைக்க முடியும்.
இந்த சந்தர்ப்பத்தை விட்டால், அடுத்து 2031ஆம் ஆண்டு தான் இதுபோன்ற அமைப்பு நிகழும். ஆகவே, இந்த குறுகிய காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment