"நாசா 2022 மனித ஆய்வு ரோவர்" சவாலில் 2 இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

"நாசா 2022 மனித ஆய்வு ரோவர்" சவாலில் 2 இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி..!

வாசிங்டன், மே 5 'நாசா' பல்கலைக்கழக பிரிவு சவாலில் தமிழ் நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி குழு வெற்றி பெற்றுள்ளனர். 

"நாசா 2022 மனித ஆய்வு ரோவர்" சவாலில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் விண்வெளி மய்யமான நாசா நடத்திய "நாசா 2022 மனித ஆய்வு ரோவர்"  சவாலில் 58 கல்லூரிகள் மற்றும் 33 உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 91 அணிகள் பங்கேற்று இருந்தன.

இந்த சவாலுக்காக சூரிய மண்டலத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் நிலப்பரப்பை உருவகப் படுத்தும் போக்கில் மனிதனால் இயங்கும் ரோவரை வடிவமைக்க வேண்டும் என தெரிவிக்கபட்டு இருந்தது.

பள்ளிகள் அளவிலான போட்டியின் விருதுக்கு பஞ்சாப்பைச் சேர்ந்த டீசண்ட் சில்ட்ரன் மாடல் பிரசிடென்சி உயர்நிலைப் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதே போல் கல்லூரி/பல்கலைக்கழக பிரிவில் தமிழ்நாட்டின் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் குழு சமூக ஊடக பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.


No comments:

Post a Comment