2020-ஆம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு இந்திய சிவில் பதிவு அமைப்பு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

2020-ஆம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு இந்திய சிவில் பதிவு அமைப்பு வெளியீடு

 புதுடில்லி, மே 5 இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு ஆகி உள்ளன. இதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 இந்திய சிவில் பதிவு அமைப்பின் (சி.ஆர்.எஸ்.) 2020-ஆம் ஆண்டுக்கான தரவுகளை இந்திய தலைமை பதிவு இயக்குனர் (ஆர்.ஜி.அய்) வெளியிட்டுள்ளார்.

இதில் கரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வந்த 2020-ஆம் ஆண்டில் அனைத்து காரணங்களாலும் நேரிட்ட இறப்பு என்ற வகையில் கூடுதலாக 4.75 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இதனால் 2020-ம் ஆண்டில் கரோனா இறப்புகள் உள்பட மொத்த இறப்புகள் எண்ணிக்கை 76.4 லட்சத்தில் இருந்து 81.2 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 6 சதவீதம் அதிகம் ஆகும்.

2020-ஆம் ஆண்டு சி.ஆர்.எஸ். தரவுகள்படி பஞ்சாப், சண்டிகார், மிசோரம், அரியானா, மேற்கு வங் காளம், அந்தமான் நிகோபார், புதுச்சேரி, இமாசல பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் ஆகிய 

11 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 2020-ஆம் ஆண்டில் நேரிட்ட அனைத்து வகையான 90 சதவீத இறப்புகளை பதிவு செய்துள்ளன.

இந்த கூடுதலான 4.75 லட்சம் இறப்புகளுக்கு கார ணம் கரோனா தொற்றா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறியதாவது:- இந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், பதிவு நடைமுறை எளிதாக இருப்பதும்கூட காரணங்கள் ஆகும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பது போலவே இறப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே கூடுதலான இறப்புகள் அனைத்தும் கரோனாவால் நேரிட்டவை என்று கூற முடியாது.  

இந்தியாவில் கரோனா இறப்புகள்பற்றி அறிக்கை யிடும் பன்னாட்டு அமைப்புகள், ஊகத்தின் அடிப் படையிலான மாதிரிகளின் அடிப்படையிலானதை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக சட்டப்பூர்வமான, நன்கு நிறுவப்பட்ட இந்த அமைப்பின் உண்மையான எண்ணிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment