சென்னை, மே 6 சட்டப்பேரவையில் 4.5.2022 அன்று தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய தாவது: தமிழ்நாட்டில் 18 முதல் 23 வயது வரையிலான உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பெண் தொழில் முனைவோர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியாக 13.5 சதவீதமாக உள்ளது. இது திராவிட இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளின் ஒன்றாகும். தமிழ் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் தொலைநோக்கு இலக்கை அடைய தகவல் தொழில்நுட்ப துறை முறையாக திட்டமிட்டு செயல் பட்டு வருகிறது. இதில், தகவல் தொழில்நுட்பவியல் துறை 100 பில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை கொண்டுள்ளது.
தமிழ்நாட்டை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது ஓசூர், திருச்சி, கோவை, கன்னியாகுமரி போன்ற 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களுக்கு உலகளாவிய நிறுவனங்கள் முன்னிலை அளிக்கும். தமிழ்நாட்டில் புதிதாக தங்கள் அலுவலகங்களை அமைக்கும் நிறுவனங்களுக்காக ஒரு குழுவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதிக வருமானம் வரும் துறைகளில் வேலை வாய்ப்பை பெருக்கின்ற நடவடிக்கை களில் ஈடுபட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாடு தொழில்நுட்ப மய்யம் 200க்கும் மேற்பட்ட இணையதள தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க உதவுவதோடு சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நிறுவனங் களை மேமப்டுத்தவும் உதவும்.
வரும் காலங்களில் புதிய தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தற்போதுள்ள நிறுவனங் களின் வளர்ச்சியை ஊக்குவித்து அவர்களை பில்லியன் டாலர் வருவாய் நிறுவனங்களாக உருவாக்குவது, புதிய தொழில் முனைவோரை உருவாக்குவ தோடு 1:10 மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கிட முடியும். இந்தியாவில் பெங்களூர், மும்பைக்கு அடுத்தபடியாக சென்னையில் அதிக தரவு மய்ய திறன் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப பகுதிகளில் அதிக முதலீடுகளை நம்மால் நிச்சயமாக ஈர்க்க முடியும்.படையாற்றல் சேவைகள், விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம், விவசாய தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான கொள்கைகள் வகுக்க அரசு முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறை தமிழ்நாட்டு மின் ஆளுமை முகமை அய்டி நண்பன் என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியது. இது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
முதலமைச்சரால் அறிவிக்கப்பட் டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சாலை பகுதியில் தீம் பார்க், சைக்கிள் ஓட்டும் கிளப்புகள், வார இறுதி சுற்றுலா போன்ற பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்த அதுசார்ந்த துறைகளுடன் முயற்சி மேற்கொள்ளப்படும். இ-சேவை 2.0 என்ற திட்டம் கூடிய விரைவில் 300 சேவைகள் வழங்கப்பட உள்ளது. இ-சேவைக்கு என்று தனியாக ஒரு செயலியும் உரு வாக்கப்பட்டு வருகிறது. விண்ணப்ப தாரர்கள் ஒருமுறை பதிவு செய்து அதன்மூலம் பலமுறை சேவைகளை பெற முடியும். குறுந்தகவல் மூலம் சேவை விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு சேவை கட்டணங் களை டெபிட், கிரெடிட் அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தரவு தூய்மை திட்டத்தை நடை முறைபடுத்த தகவல் தொழில்நுட்ப துறை, தமிழ்நாடு மின்னாளுமை முகமை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தரவுத் தூய்மை திட்டம் மூலமாக பல்லாயிரம் கோடி அரசுக்கு சேமிப்பு ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களில் குடிமக்கள் ஒவ்வொருவரும் தான் எந்த திட்டத்திற்கு தகுதியுடையவர் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் மாநில குடும்ப தகவல் தொகுப்பு என்ற மென்பொருள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தரவுகளின் அடிப்படையில் அரசு மக்களை தேடிசென்று திட்டங் களை வழங்கும் என்பதை இத்திட்டத்தின் மூலம் அரசு உறுதி செய்யும். கிடப்பில் உள்ள பாரத்நெட் திட்டத்தை செயல் படுத்துவதற்காக மிகவிரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 தொகுப்பு களில் 3 தொகுப்புகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு களப்பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment