இலங்கை மக்களுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதியுதவி முதலமைச்சரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

இலங்கை மக்களுக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதியுதவி முதலமைச்சரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

சென்னை, மே 5 தி.மு.க. சார்பில் வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தி.மு.க. பொருளா ளர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

இலங்கையில் பொருளாதார நெருக் கடியால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

இதற்கான ஒன்றிய அரசின் அனு மதியும் கிடைத்துள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக் கப்பட உள்ளன. 

இந்த சூழலில் நெருக்கடி நிலையில் இருக்கும் இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அக்கட்சியின் தலை வர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, நேற்று (4.5.2022) தலை மைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக சார்பில் வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கினார்.

No comments:

Post a Comment