திராவிட மாணவர் கழகம் சார்பில் மே 11 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூகநீதி இல்லாததை கண்டித்து ஜாதி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

திராவிட மாணவர் கழகம் சார்பில் மே 11 அன்று சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் சமூகநீதி இல்லாததை கண்டித்து ஜாதி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சேலம் மண்டல திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

சேலம், மே 5- சேலம் மண்டல  கழக நிர் வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் அவர் களின் இல்லத்தில் 4.5.2022 மாலை 6.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.அனைவரையும் வரவேற்று ஆத்தூர் அ. சுரேஷ் உரையாற் றினார் .

மண்டல   தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார் .மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெய ராமன்,  மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன்,  சேலம் மண்டல செயலாளர் விடுதலை சந்திரன், மேட்டூர் மாவட்டத் தலைவர் க. கிருட்டினமூர்த்தி,  மாவட்ட செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ. சேகர் 

சேலம் மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், மாவட்ட இணைச்செயலாளர் வீரமணி ராஜு, சேலம் மாநகர செயலாளர் பா. வைரம் , மண்டல மாணவர் கழக செயலாளர் திராவிட முருகன், மண்டல இளைஞரணி செயலாளர் வாழப்பாடி  வேல்முருகன் , சேலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அ. தமிழர் தலைவர் , மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. அன்புமதி, சேலம் கருணாகரன், பெரியார் பல்கலைக்கழக மாணவர் இசைச்செல்வி, பொன்னம்மாபேட்டை பாஸ்கரன்,  நடுவலூர் அழகுவேல்  உள்ளிட்ட தோழர்கள் கருத்துரை வழங்கினார்கள். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண் ணன்பெரியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் சமூக நீதிக்கு எதிராக  இருப்பதை விளக்கியும்,   தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சரியான நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததற்கு நன்றியும்  தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் ஆர்ப்பாட்ட செலவிற்காக சேலம் மாவட்ட இணைச்செயலாளர் வீரமணி ராஜூ , மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோவி. அன்புமதி ஆகியோர் மண் டலத் தலைவர் சிந்தாமணியூர் கவிஞர்.சி. சுப்ர மணியம் அவர்களிடம் நன்கொடை வழங்கி னார்கள்.

தீர்மானங்கள்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமூகநீதி இல்லாததை கண்டித்து ஜாதி ஆதிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிட மாணவர் கழகம் சார்பில் 11. 5.2022  அன்று காலை 10 மணிக்கு திராவிட மாணவர் கழகமாநில அமைப் பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலைமையில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது .

2) சேலம் , மேட்டூர்,  ஆத்தூர்,  நாமக்கல்,  தருமபுரி , கிருஷ்ணகிரி,  ஓசூர் மாவட்ட கழக திராவிட மாணவர் கழக தோழர்களை பெருமளவில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது .

3)நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெற்ற நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயண கூட்டத்தை சேலத்தில் நடத்துவதற்கு வாய்ப் பளித்த  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது .  

மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள்:

சேலம் மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் அ. பாஸ்கரன்,  மேட்டூர் மாவட்ட மாண வர் கழக அமைப்பாளர் இரா. தமிழ்மணி,  ஆத்தூர் மாவட்ட மாணவர் கழக தலைவர் பா. அழகுவேல்,  செயலாளர் இரா. அகஸ்டின்,  அமைப்பாளர் சே.ஜான்சிராணி.


No comments:

Post a Comment