தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 11 மாதங்களில் 11 லட்சம் உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 3, 2022

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 11 மாதங்களில் 11 லட்சம் உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன

காஞ்சிபுரம், மே 3- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 11 மாதங் களில் 11 லட்சம் உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட் டுள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சிறுகாவேரிப்பாக்கம் உணவுப் பங்கீட்டுக் கடை, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு, கீழம்பி நியாய விலை கடை, தாமல் மற்றும் விஷார் நெல் கொள்முதல் நிலையங்களை அவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மாநிலம் முழுவதும் உணவுப் பங்கீட்டுக் கடைகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 பேர் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். தரமான பொருட்கள் நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர் ஆகியோரை கொண்ட ஆய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும்.

மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். தரமான அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்த வேண்டும். 

286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்குகள் ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும். 800 முதல் 3 ஆயிரம் பங்கீட்டு அட்டைகள் கொண்ட கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும்.

தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 11 மாதங்களில் 11 லட்சம் புதிய உணவுப் பங்கீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் குறைந்தது கரோனா பாதிப்பு...!

சென்னை, மே 3 தமிழ்நாட்டில்  நேற்று கரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று (2.5.2022) 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து  49 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கரோனா தாக்குதலுக்கு நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற அளவில் உள்ளது.

No comments:

Post a Comment