மேலும் மேலும் அடிமேல் அடி! வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.102 அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

மேலும் மேலும் அடிமேல் அடி! வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.102 அதிகரிப்பு

சென்னை, மே 2- சென்னையில் வர்த் தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.102.50 உயர்ந்து, ரூ.2,508.50 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைமேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்குநிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படை யில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங் கள் நிர்ணயிக்கின்றன. இதில் பெட்ரோல், டீசல்விலை தினந் தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு விலைமாதத் துக்கு 2 முறை என்ற அடிப்படையி லும் நிர்ணயிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட் டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.101 அதிகரித்து எரிவாயு உருளை விலை ரூ.2,234.50 ஆக நிர்ணயிக்கப் பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்துக் கான வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையை எண் ணெய் நிறுவனங்கள் குறைத்தன. இதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக் கான எரிவாயு உருளை விலை ரூ.103.50 குறைக்கப்பட்டது. மீண் டும் கடந்த மார்ச் மாதம் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை ரூ.268.50 ஆக அதிகரிக்கப் பட்டது.

இந்நிலையில், வர்த்தக பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை விலை நேற்று ரூ.102.50 அதிகரித்து ரூ.2,508.50 ஆக உள்ளது. ஏற் கெனவே, பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் வண்டிவாடகைக் கட்ட ணம் அதிகரித்துள்ளதால் உணவுப் பொருட்களின் விலை ஏற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் உணவகங்கள், தேநீர் கடைகளில் உணவுப் பொருட்கள் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment