சென்னை, மே 4 கடுங்கோடை வெயில் இன்று (4.5.2022) தொடங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயில் சதம் கண்டு வருகிறது. அந்த வகையில், நேற்றும் வெயில் கடும் வெப்பத்தை உமிழ்ந்தது. தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூர், திருச்சியில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கு அடுத்தப்படியாக திருத்தணி, மதுரை விமான நிலையத்தில் தலா 104 டிகிரி, ஈரோடு, கரூர் மற்றும் மதுரை நகரம், தஞ்சையில் தலா 102 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி மற்றும் பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இதேபோன்று, பிற முக்கிய இடங்களிலும் 96 முதல் 98 டிகிரி வெயில் சராசரியாக பதிவாகி இருக்கிறது.
No comments:
Post a Comment