வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - கல்வித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் - கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, மே 5 வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. 

கரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இந்த ஆண்டு சற்று தாமதமாகவே தொடங்கி நடைபெற உள்ளது. 

இந்தியாவின் வட மாநிலங் களில் இந்த வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்ப தால், சில மாநிலங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வருவ தற்கு சில குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருக்கிறது. சில மாநி லங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை யையும் அறிவித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்  கடந்த 2ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களிடம் கூறும்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தேர்வுக்கு மட்டும் வந்தால் போதும்

12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு இன்று (வியாழக்கிழமை) பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடைவெளி விட்டு தேர்வு நடைபெற உள்ளது. கொளுத் தும் கோடை வெயிலில் பெரிய வர்களாலேயே வெளியில் செல்ல முடியாத நிலை இருக்கும் போது, மாணவர்களை தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வரச்சொல்லலாமே, மற்ற நாட் கள் அவர்களுக்கு விடுமுறை வழங்கினால் அவர்களின் உடல் நலன் காக்கப்படுமே என்று கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கைகள் எழுந் தன. அந்த வகையில் சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் இதுதொடர்பாக நேற்று செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாண வர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு மாணவர்கள் வரத் தேவையில்லை. வெயிலின் தாக் கம் காரணமாகவும், மாணவர் கள் நலன் கருதியும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.


No comments:

Post a Comment