பெங்களூரு, ஏப். 4- கருநாட கத்தில் சங்-பரிவாரங்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பை விதைத்து வரும் நிலை யில், கருநாடக ஜம்மியத் உலமா சபையோ, முஸ்லிம்கள், தங்களின் ரம்ஜான் பண்டிகைக்கு இந்து வியாபாரிகளிடமும் பொருட் களை வாங்குமாறு கேட் டுக் கொண்டுள்ளது.
“ஒரு முஸ்லிம் அனைத்து மதங்களை சேர்ந்த மக்களுக்கும் மரியாதை தர வேண்டும். எந்த மதத்தினருக்கும் நாம் கேடு நினைக்கக்கூடாது. நம்மை சுற்றி வசிக்கும் அனைத்து மதத்தவர் களின் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்தாக வேண்டும். முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிம் அல்லாதவராக இருந்தா லும் நல்ல விதமாக நடத்த வேண்டும். இது தான் இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்த பாடம். மத ரீதியாக ஏற்றத்தாழ்வு பார்க்காதீர்கள். அண்டை வீட்டார்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள்.
எனவே, மத வெறி யர்களின் சதித்திட்டத் தில் யாரும் விழுந்துவிட வேண்டாம்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத் தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment