உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற உதவியாளர் (மொழிபெயர்ப்பாளர்) பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : தமிழ், அசாம், வங்காளம், தெலுங்கு, குஜராத்தி, உருது, மராத்தி, கன்னடம், மலையாளம், மணிப்பூரி, ஒடியா, பஞ்சாபி மொழியில் தலா 2, நேபாளி 1 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஆங்கிலத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் இருந்து விண்ணப்பிக்கும் மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியில் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது : 1.1.2021 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, தட்டச்சு பயிற்சி, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 250. கடைசிநாள் : 14.5.2022
விவரங்களுக்கு : https://main.sci.gov.in/recruitment
No comments:
Post a Comment