திராவிடர் கழகம் மேற்கொண்ட பிரச்சாரப் பெரும் பயணம் வெற்றிபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! ஆங்காங்கே நிகழ்வில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்கள் - கட்சி நிர்வாகி களுக்கும் நன்றி! தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவு விழாவில் பங்கேற்று கொள்கைப் பிரகடனம் செய்தமைக்கு நன்றியும், பாசமிகு பாராட்டும்! பயணத்தில் பங்கு கொண்ட தோழர்களைப் பாராட்டுகிறோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு.
குமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் தொடங்கிய நமது பிரச்சாரப் பெரும் பயணம் - நீட் தேர்வு எதிர்ப்பு, நவீன குலக்கல்வித் திட்டமான தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்புக்கு எதிரான மக்கள் விழிப்புக்கான பெரும் பயணம் ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 25 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.
38 மாவட்டங்கள்
40 பெரும் பொதுக்கூட்டங்கள்
இரண்டு மாநிலங்கள்
4,700 கிலோ மீட்டர்
உடன் 30 தோழர்கள்
எனது ‘வேன்' உள்பட அய்ந்து வாகனங்கள்
பிரச்சாரப் பெரும்பயண விளக்கப் புத்த கங்கள் விற்பனை ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
அண்டை மாநில எல்லைகளைத் தொட்டப் பிரச்சாரம்!
நாகர்கோவில் - கேரள எல்லை
ஓசூர் - கருநாடக மாநில எல்லை
இராமநாதபுரம் - கிழக்குக் கடற்கரை எல்லை
திருத்தணி - ஆந்திர மாநிலத்தை ஒட்டிய நகரம்.
நமக்குத் தனி உற்சாகத்தை அளித்தனர்!
மாண்புமிகு அமைச்சர் பெருமக்களில் திருச்சிக் கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், சட்டப் பேரவை துணைத் தலைவரான திரு.பிச்சாண்டி அவர்களும், கடலூரில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும், பெரம்பலூரிலும், அரியலூரிலும் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா எம்.பி., அவர்களும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், திண்டிவனத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர் களும், அந்தந்த மாவட்டச் செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு நமக்குத் தனி உற்சாகத்தை அளித்தனர்.
விளக்கவுரை, ஊக்கவுரை ஆற்றினர்
கூட்டணிக் கட்சித் தலைவர்களான பெருமக்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் மதுரையிலும், ம.தி.மு.க. கட்சித் தலைவர் சகோதரர் வைகோ அவர்கள் சென்னையிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் ஈரோட்டி லும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருத்தணியிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கள்ளக்குறிச்சியிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திண்டிவனத்திலும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் செங்கற்பட்டிலும், ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரம், செங்கற்பட்டிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவர் தி.கண்ணன் கடலூரிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரகுமான், மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் திருச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக விளக்கவுரை, ஊக்கவுரை ஆற்றினர்.
ஏற்கெனவே தோழமை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவரவர்கள் முன்பு வாக்களித்தபடி கலந்துகொண்டு ஊக்கம் தந்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், பேச்சாளர்கள் முனைவர் அதிரடி க.அன்பழகன், இரா.பெரியார்செல்வன், இராம.அன்பழகன், வழக்குரைஞர் தோழர் சே.மெ.மதிவதினி மற்றும் உள்ளூர் தோழமைத் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.
மறக்க முடியாத ஒரு பெருமிதமாகும்!
அனைத்துக் கூட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தலில் பெருவெற்றி பெற்ற மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், மகளிர் பொறுப்பா ளர்கள் மற்றும் ஆண் தோழர்கள் பலரையும் பாராட்டி மகிழ நமக்கு வாய்ப்பளித்தது மறக்க முடியாத ஒரு பெருமிதமாகும்!
ஆங்காங்கு சட்டப்பேரவை உறுப்பினர் பலரும் கலந்துகொண்டது பரப்புரைப் பயணத் தில் மேலும் உற்சாகத்தை அளித்தது!
நமது கழகப் பொதுச்செயலாளர்கள், அமைப்பாளர்கள் பம்பரமாகச் சுழன்று சுழன்று உற்சாகத்துடன் இவ்வெற்றிக்குத் தங்களது குன்றாத உழைப்பின்மூலம் அடித் தளமிட்டார்கள்!
நமது வாகனங்களை ஓட்டிய தோழர்கள் சி.தமிழ்ச்செல்வன், வெ.முத்துராஜ், ந.மகேஷ் வரன், தா.பிரபாகரன், அ.அருள்மணி, ப.அன்ப ரசன் ஆகியோரும், புத்தகப் பரப்பாளர்கள் தோழர் ஆத்தூர் சுரேஷ், ஆ.சாந்தகுமார், ப.அர்ஜூன், அ.அருண்குமார் ஆகியோரும் சிறப்பாகப் பணி செய்து முத்திரைப் பதித்தனர்!
நிகழ்வுகளை அருமையாக ஒலி, ஒளிப் பதிவு செய்து உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய அளவிற்குப் பணியாற்றிய பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், கமலேஷ் சிறப்பாகப் பணிகளைச் செய்தனர்.
நிகழ்வின் செய்திகளையும், ஒளிப்படத் தையும் உடனுக்குடன் 'விடுதலை' நாளித ழுக்கு அனுப்பி பதிவு செய்த என்னாரெசு பிராட்லா, ஒளிப்படக் கலைஞர் பா.சிவகுமார் ஆகியோருக்கு நன்றி!
பயணக் குழுவில் பல்வேறு பணிகளை ஆற்றிய சற்குணம், குட்டி வீரமணி, பெரியார் தாசன், ஆனந்தபாரதி ஆகியோருக்குப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்பாடுகளை - புது வெள்ளம் பாயக்கூடிய அளவிற்குச் செய்தனர்!
பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், தோழர் இரா.செந்தூர்பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெய ராமன், (தருமபுரி கல்வெட்டுகள் பிரமாதம்) மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், சென்னை வி.பன்னீர்செல்வம் அனைவரும் அருமையாக ஒத்துழைத்தனர்.
மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சிப் பொங்க ஏற்பாடுகளை - புது வெள்ளம் பாயக்கூடிய அளவிற்கு செய்தனர்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரும் நீந்தி, நம் அனைவரையும் மூழ்க வைத்தார் முதலமைச்சர்!
இந்த எழுச்சிமிகு பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், பிரச்சாரப் பெரும் பயணம் குறித்துப் பாராட்டுத் தெரிவித்ததுடன், திராவிட இயக்கக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது - நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ப்பதாகும். எந்த நிலையிலும் சமரசத்துக்கு இடம் இல்லாமல் ''திராவிட மாடல்'' கொள்கை செயல்படுத்தப் படும் என்று அறிவித்தது எல்லாம் பலபடப் பாராட்டத்தகுந்ததாகும். மகிழ்ச்சி வெள்ளத்தில் அவரும் நீந்தி, நம் அனைவரையும் மூழ்க வைத்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சருக்கும், உணர்ச்சிபூர்வ கொள்கை உறவு உரையாற்றிய திராவிட இயக்கப் போர்வாள் மானமிகு சகோதரர் வைகோ எம்.பி., அவர்கள், ஏற்பாடுகளையெல்லாம் பெரிதும் துணை நின்று செய்த இந்து அறநிலையத் துறையில் வரலாற்றுச் சாதனை புரிபவரும், திடலுக்குரிய அமைச்சருமான மாண்புமிகு பி.கே.சேகர்பாபு அவர்கள், வணக்கத்திற்குரிய மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ம.தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், சொல்லின் செல்வர் சகோதரர் நாஞ்சில் சம்பத், பேராசிரியர் மு.நாக நாதன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், நமது மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், உடன் வந்த தோழர்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றி! நன்றி!! நன்றி!!!
சேலத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும், கொள்கையாளரும், அடக்கமும், அமைதியின் உருவமுமான சகோதரர் இரா.ராஜேந்திரன் அவர்கள், திருப் பத்தூரில் கழக மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் அவர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி!
உதாரணத்திற்கு மட்டும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மற்றவை சிறப்புக் குன்றியவையல்ல.
சிட்டென பறந்து ஏற்பாடுகளைச் செய்த கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், பொறுப்பாளர்கள் அனைவருக்கும்,
தலைமைக் கழகத்திலிருந்து ஒருங் கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும்,
எனது அன்பான நன்றி! நன்றி!! நன்றி!!!
பயணங்கள் ஏற்படுத்தும் பலன்கள் -
நமது வலியைப் போக்கி,
வலிமையை நமக்குத் தந்துள்ளது.
சோர்வில்லை - களைப்பில்லை - களம் காணும் உறுதி, உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபணி பற்றிய சிந்தனைகள் எம்மை ஆளுகிறது!
நன்றி!
No comments:
Post a Comment