தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கரோனா பாதிப்பு..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கரோனா பாதிப்பு..!

சென்னை, ஏப்.5- தமிழ்நாட்டில் நேற்று (4.4.2022) 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (4.4.2022) புதிதாக 20 ஆயிரத்து 29 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 930 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 263 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழ்நாட்டில் தொடர்ந்து 18ஆவது நாளாக நேற்று கரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 33 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment