நிதானம் தேவை துக்ளக்கே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 7, 2022

நிதானம் தேவை துக்ளக்கே!

எச்சரிக்கை -1 

தமிழர்கள் மானத்தை கப்பலேற்றும் திட்டம் !

கேள்வி: உலக மொழிகளில் பெரியாரின் சிந்தனைகளை வெளியிட,  தமிழகப் பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கியது பற்றி... மல்லிகா அன்பழகன் சென்னை - 78 லிருந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பதில்: 'தமிழன் காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி மொழி. திருக்குறள் - தங்கத்தட்டில்  வைத்த மலம். தொல்காப்பியன் மாபெரும் துரோகி, தமிழ்ப் புலவன் என்றால் புளுகன், சொந்தப் புத்தி இல்லாதவன், சிலப்பதிகாரம் தேவடியாள் சரித்திரம், பணம் சம்பாதிக்கவே   அண்ணாதுரை திராவிடர்  கழகத்திலிருந்து வெளியேறினார். அரசியல் சட்டம் ஒழிய வேண்டும்.  திருமண முறை ஒழிந்து, யார் யாருடன் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருக்க வேண்டும், கற்பு என்பது பெண்ணடிமை,  எந்த ஜாதி,  மதத்துக்கும் சலுகை கூடாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது கொடுமை. முஹம்மது நபி மஹான் அல்ல, ஹைகோர்ட் ஒரு சனியன். காங்கிரஸ் நாட்டை அழிக்க வந்த  அரக்கன், எவன் காலையாவது நக்கி வயிறு வளர்க்கிறவன் கம்யூனிஸ்ட், பார்ப்பான் சாணி என்றால், முஸ்லிம் மலம்' போன்ற ஈ.வெ.ரா.வின் மணிமணியான கருத்துக்கள், இதுவரை நமக்குள் ரகசியமாக இருந்தன. அந்தப் பரம ரகசியங்களை 51 உலக மொழிகளில் வெளியிட்டு அம்பலப்படுத்தி, தமிழர்களின் மானத்தை கப்பலேற்ற ஸ்டாலின் அரசு  திட்டமிட்டிருக்கிறது.                                             'துக்ளக்' 13.4.2022 பக்கம் 3

தந்தை பெரியார் இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பது உண்மையா? கூறப்பட்டுள்ளவற்றிற்கு ஏதாவது ஆதாரக் குறிப்பு உண்டா? எதை எழுதினாலும் ஆதாரம் தெரிவிக்காத  அப்பட்டமான 'ஆபாச'க் கூட்டம் இது; குறிப்பாக திருக்குறள் தங்கத் தட்டில் வைத்த மலம்! என்று தந்தை பெரியார் கூறியதாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டு வருகிறார் திருவாளர் குடுமி குருமூர்த்தி அய்யர்வாள்.

'ஆதாரத்துடன் கூறுவீரா?' என்று பலமுறை 'பளார்' என்று அறைந்தது போல நாம் எழுதியும் அறிவு நாணயமாக எதிர் கொள்ள முடியவில்லை. 21 மொழிகளில் பெரியார் கருத்து என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால் குருமூர்த்தியோ 51 மொழிகள் என்கிறார்.

பெரியார் சொல்லாத, ஆபாச சொற்களை சொன்னதாக 'துக்ளக்' எழுதுவது தமிழ்மீது துக்ளக்குக்கு இருக்கும் ஆத்திரமும் அருவருப்புமே!

நிதானம் தேவை - தந்தை பெரியார் பற்றித் தாறுமாறாக எழுதினால் தமிழ்நாட்டு மக்கள் பொறுக்க மாட்டார்கள். நாணயமாக எழுதட்டும் - சந்திக்கத் தயார்!

No comments:

Post a Comment