300 ஆண்டுகளுக்கு மேலாக கடலுர் முதுநகரில் தற்போதும் இயங்கிவரும் தூயதாவீது மேல்நிலைப்பள்ளியின் மேனாள் மாணவராகிய தாங்கள் திராவிடர் கழகத்தில் ஒரு சாதாரண தொண்டனாக பணியாற்றத் தங்களை இணைத்துக்கொண்டு - தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின் அன்னையார் மானமிகு
ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்கள் கழகத்தின் தலைமை பொறுப்பினை ஏற்றபோது அவர்களால் தந்தை பெரியாரின் கொள்கைகளை நம்நாடு மட்டுமின்றி உலக நாடுகளில் பரப்புவதற்கு ஏதுவாக தங்களை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக நியமனம் செய்து 44 - ஆண்டுகள் முடிந்து 18.3.2022 அன்று 45-ஆவது ஆண்டு தொடங்கியதை அறிந்து மகிழ்ந்து குடும்ப நண்பர் மற்றும் தூயதாவீது மேல்நிலைப்பள்ளி மேனாள் மாணவர்கள் சங்கத் துணைத் தலைவர் என்ற முறையில், சங்கத்தின் மூத்த உறுப்பினரானத் தங்களுக்கு எனது பாராட்டுதலையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- த. சண்முகசுந்தரம், கடலூர் முதுநகர்
No comments:
Post a Comment