ஒன்றிய அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம்: ஹவல்தார் (மறைமுகவரி, சுங்கத்துறை, வருவாய் துறை) பணிக்கு 3603,
எம்.டி.எஸ்., (நான் டெக்னிக்கல்) பணிக்கு காலியிடம் அறிவிக்கப்படவில்லை.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2022 அடிப்படையில் வருவாய் துறையில் 18 - 25, மறைமுகவரி, சுங்கத்துறையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு (ஆண்கள் 1600 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்திலும், பெண்கள் ஒரு கி.மீ., தூரத்தை 20 நிமிடத்திலும் கடக்க வேண்டும்.
உயரம்: ஆண் 157.5 செ.மீ., பெண் 152 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 30.4.2022
விவரங்களுக்கு: https://ssc.nic.in/
என்.பி.சி.சி. நிறுவனத்தில்
காலிப் பணியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த என்.பி.சி.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: ஜூனியர் இன்ஜினியர் சிவில் 60, ஜூனியர் இன்ஜினியர் எலக்ட்ரிக்கல் 20, துணை பொது மேலாளர் 1 என மொத்தம் 81 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜூனியர் இன்ஜினியர் பிரிவுக்கு குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் மூன்றாண்டு டிப்ளமோ, துணை பொது மேலாளர் பணிக்கு பி.இ., சிவில் முடித்திருக்க வேண்டும்.
வயது : ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு 14.4.2022 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் பணிக்கு 46 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.4.2022 மாலை 5:00
விவரங்களுக்கு: www.nbccindia.in/webEnglish/jobs
No comments:
Post a Comment