ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.29 பெட்ரோல், டீசல் வரி குறைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி, பொறுப்பை தட்டிக் கழிப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்குமாறு, மாநில அரசுகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று (28.2.2022) தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:- எரிபொருள் விலை உயர்வுக்கு மாநிலங்கள் மீது பழி போடுகிறது. நிலக்கரி தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கும் மாநிலங்கள் மீது பழி போடுகிறது. எரிபொருள் மீதான வரிகளில், 68 சதவீதத்தை ஒன்றிய அரசுதான் எடுத்துக் கொள்கிறது. இருப்பினும், பிரதமர் மோடி பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். அவரது கூட்டாட்சி தத்துவம், ஒத்துழைப்பானது அல்ல, நெருக்கடி கொடுக்கக்கூடியது என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment