தமிழர் தலைவருக்கு வரவேற்பு - பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவிப்பு - நூல்களையும் பெற்றுக் கொண்டனர்
பரப்புரை பெரும் பயணத்தில் புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை பெரியார் பெருந்தொண்டர் மண்டலத் தலைவர் பெ.இராவணன், தி.மு.க. இலக்கிய அணி மாநில செயலாளர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் மற்றும் கழக முன்னணித் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.
------
புதுக்கோட்டை கூட்டத்தில் பொன்னமராவதி மதுபாலா, குழிப்பிறை பொன்மதி, கண்ணனூர் கவிஞர் அஜித்குமார், கண்ணனூர் விஸ்வா, ஆதனக்கோட்டை போகராஜ், செ.பிரசாந்த், ராகுல், மாங்கோட்டை ப்ரவீன், கலைராஜ், பாரத், பாலகுமார், அழகர் ஆகியோர் தங்களை திராவிட மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். உடன் மாநில ப.க. துணைத் தலைவர் பொன்னமராவதி அ.சரவணன், திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன்.
-----
தி.மு.க. இலக்கிய அணி மாநில செயலாளர் கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியினர் உள்ளனர்.
----
----
92 வயதான மூத்த பெரியார் பெருந்தொண்டர் இர.புட்பநாதன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துக் கூறினார்.
----------
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர்.
--------
No comments:
Post a Comment