சென்னை,ஏப்.29- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் சென்னைக்கு வந்தார். அவர் ஆளுநர் மாளிகையில் தங்குவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆவடியில் தங்கினார். அங்கு அவரை, என்.அய்.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சந்தித்தனர் என்றும், அதன்பின்னர் அவர் பாஜகவினருடன் ஆலோசனை நடத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, 'பா.ஜ.க.வுக்கு தி.மு.க., தான் நம்பர் ஒன் எதிரி. அதனால் தமிழ்நாடு அரசை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும். 'இதற்கு, பா.ஜ., தலைமை முழு ஆதரவு அளிக்கும்' என, அமித்ஷா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment