நாகர்கோவிலைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் கல்வியாளர், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.
நேற்று (3.4.2022) நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டத் தொடக்க விழா சென்ற இவர், உடனடியாகத் தம் முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
''திராவிடர் கழகம் இன்று நாகர்கோவிலில் ஆரம்பித்து சென்னை வரை 21 நாள்கள் மாநில உரிமை மீட்புப் பயணம் ஆரம்பித்துள்ளார்கள்
நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம்.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லா மாவட்டங்களிலும் மாலை 5 மணிக்கு மேல் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
நீட் தேர்வு எதிர்ப்புக்கு குரல் கொடுக்கும் அனைவரும் இப்பயணத்தை வெற்றியடை செய்ய வேண்டுகிறேன்.
எப்போழுதும் போல் மெயின் ஸ்டிரீம் நாளிதழ்கள், ஊடகங்கள் பீஸ்ட் படம் பற்றியும், சித்திரைத் திருவிழா போன்ற கொண்டாட்டங்கள் பற்றி பேசியும் எழுதியும் இருந்துவிட்டு, பின்னாளில் பெரியார் திடல் என்ன செய்தது, ஆசிரியர் என்ன செய்தார் என்று கேள்வி கேட்க மட்டும் முன் வரிசையில் வந்து விடுவார்கள்.
பெரியார் வழி செயல்படும் ஆசிரியர் கரத்தை வலுப்படுத்த இந்தப் பரப்புரைப் பயணத்தை வெற்றிப் பயணமாக மாற்றிட என் தோழர்களுக்கும், நட்புகளுக்கும் அன்பு வேண்டுகோள். நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற நம்மால் இயன்றதைச் செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்!'' என்று அவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment