புதிய தேசிய கல்விக்கொள்கையில் சமூகநீதி என்ற சொல்லே கிடையாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

புதிய தேசிய கல்விக்கொள்கையில் சமூகநீதி என்ற சொல்லே கிடையாது!

தூத்துக்குடியில் தமிழர் தலைவர் தோலுரித்தார்

தூத்துக்குடி,ஏப்.6-  புதிய தேசிய கல்விக்கொள்கையில் சமூக நீதி என்ற சொல்லே கிடையாது என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் தோலுரித்தார்

3.4.2022 அன்று நாகர்கோவிலில் தொடங்கி, நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்   நேற்று (5.4.2022) தூத்துக்குடி, சிவகாசியில் சிறப்புரை ஆற்றினார்.

தூத்துக்குடி

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் தூத்துக்குடி சிதம்பரம் நகர் விளக்கில்  மாவட்ட தலைவர் மா.பால் இராசேந்திரம் தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர் சு.காசி  அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட செயலாளர் மு.முனியசாமி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கோவில்பட்டி செ.ஜெயா, மாவட்ட இளைஞரணி தலைவர் . கந்தசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்குரைஞர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை யாற்றினார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக, மாணவச்செல்வங்களின் கல்வி உரிமைக் காக பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வழிநெடுகிலும் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து ஒன்றிய அரசால் திணிக்கப்படுகின்ற நீட் தேர்வு எதிர்ப்பு, குலக்கல் வியின் புதிய வடிவமாக ஒன்றிய அரசால் கொண்டு வரப்படுகின்ற தேசிய கல்விக்கொள்கை, எதிர்ப்பு மற்றும்  ஒன்றிய அரசால் பறிக்கப்படுகின்ற மாநில உரிமைகளை மீட்பதற்கான பரப்புரைப் பெரும்பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கி பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண் டுள்ளார். ஏப்ரல் 3 இல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டுள்ள பரப்புரைபெரும்பயணம் ஏப்ரல் 25இல் சென்னையில் நிறைவடைகிறது. நிறைவுநாளில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு..ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

நாகர்கோவில், தென்காசி, நெல்லையைத் தொடர்ந்து நேற்று (5.4.2022) தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்டார் கழகத் தலைவர்.

தூத்துக்குடியில் தமிழர் தலைவர் சிறப்புரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையில், திராவிடர் இயக்கம் உருவானதே நமக்கு கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெறத்தான்! புதிய தேசிய கல்விக் கொள் கையில் சமூக நீதி என்ற சொல்லே கிடையாது! என்று குறிப்பிட்டார்.

அவர் தனது உரையில், “தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார். அவருடைய வகுப்புகள் மாலை நேரங்களில்தான் தொடங்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. அதுபோல நாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்க வந்திருக்கிறோம் என்று தொடங்கினார். தொடர்ந்து அவர், இந்தப் பரப்புரை பெரும் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, ”சாய்வாலா என்று சொல்லிக்கொண்ட மோடி ஆட்சியின் சிறப்பு என்னன்னா தேநீர் கூட 10 ரூபாய்க்குக் கிடைக்காது. விலைவாசி இனிக்க வில்லை. கசக்கிறது. ஆனால், நாங்க, 15 ரூபாய் அடக்கவிலை உள்ள புத்தகத்தை 10 ரூபாய்க்கு போட்டிருக்கிறோம். இதுகூட எதுக்குன்னா? எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாதென்று பெரியார் சொல்வது வழக்கம். நாங்க இந்த குறுகிய நேரத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. அதற்காகத்தான் நீங்க இந்த புத்தகத்தை வாங்கிப்படிக்கணும். நமக்கு வந் திருக்கிற ஆபத்தைப் பற்றி நீங்க முழுமையாகத் தெரிந்து கொள்ளணும். எங்களுக்காக அல்ல. உங்கள் பிள்ளை களுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக இந்தப்புத்தகத்தை படிக்கணும். ஏன்னா, திராவிடர் இயக்கம் உருவானதே நாம் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்பதற் காகத்தான்.

'கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுவதுபோல', நாம் உருவாக்கி வைத்திருந்த கல்லூரிகளில் வடநாட்டுக்காரர்கள் ஆக்கிரமிப்பதற்குத்தான் நீட், புதியதேசிய கல்விக்கொள்கை என்றார். எதையெடுத்தாலும் 'ஒரே, ஒரே' என்று சொல் கிறார்கள். நாங்கள்தான் திரும்பத் திரும்ப, 'எல்லாமே ஒரே' என்று சொல்கிறீர்களே, ஏன் 'ஒரே ஜாதி' என்று சொல்லக் கூடாது? என்று கேட்டிருக்கிறோம். பதிலில்லை. அப்படி சொல்லிவிட்டால் எல்லா பிர்ச்சனைகளும் தீர்ந்துவிடும் அல்லவா? பார்ப்பான் கிடையாது. பறையன் கிடையாது. கீழ்ஜாதி கிடையாது. மேல்ஜாதி கிடையாது. எல்லாரும் ஒன்றாக இருக்கலாமே என்றதும் மக்கள் கைகளைத் தட்டி, அதை ஆமோதித்தனர்.

தொடர்ந்து அவர், 1954 இல் இதே குலக்கல்வியை கொண்டு வந்த இராஜகோபாலாச்சாரியை ஓடவிட்டவர் பெரியார். அதற்குப்பிறகு காமராஜர் வந்தார். அண்ணா. கலைஞர் ஆகியோர் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். அதைதான் இப்போது திராவிட மாடல் என்று உலக அளவில் பேசிக்கொண்டு உள்ளனர் என்று கூறிவிட்டு, அந்த சாதனைகளை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொடர்கிறார்.

மேலும், ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையிலும் படித்துப் பெற்ற மதிப்பெண்களுக்கு மதிப்பில் லையாம். இது தவறு என்று நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் 'ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதைப்போல, மருத்துவத்திற்கு மட்டுமல்ல, அனைத்துப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வருகின்றனர். இதனால் நம்ம பிள்ளைகள் கல்லூரிக்கே போகமுடியாது என்று வரக்கூடிய ஆபத்தைச் சொல்லிவிட்டு, “ஏற்கெனவே கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகள், இபோது கார்ப்பரேட்டுகளும் சேர்ந்துகொண் டனர்'' என்று தனது விமர்சனத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து ஆளுநரைப் பற்றிப் பேசினார். “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோத்தாக்களை அனுப்பாமல் வைத்திருந்து தமிழ்நாட்டு மக்களை கோபப்படுத்தி, எதையாவது செய்ய நினைக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் என்றே கருதுகிறேன் என்று தனது சந்தேகத்தை வெளிப்படுத்திவிட்டு, தப்பித்தவறி அப்படி எதையாவது செய்தால், நீங்கள் வேரடி மண்ணோடு தமிழ்நாட்டு மக்களால் துடைத்தெறியப்படுவீர்கள் என்று சொல்லி மக்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை முடித்துக் கொண்டார்.

நிகழ்வில் .தி.மு..மாவட்ட செயலாளர் செல்வம், வி.சி.. மாவட்ட செயலாளர் அகமது இக்பால், மாநகர கழகச் செயலாளர் மணிமொழியன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் நன்றி கூறினார்

சிவகாசி

தொடர்ந்து இரண்டு மணி நேரம் பயணம் செய்து சிவகாசிக்குச் சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

நீட் தேர்வு எதிர்ப்பு- தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு- மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயணக் கூட்டம் சிவகாசி பொதுக்குழு உறுப்பினர் வானவில் மணி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் தி.ஆதவன், மாநில ..துணைத்தலைவர் கா.நல்லதம்பி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.மணியம், நகர்மன்றத் துணைத் தலைவர் பா.அசோக், மாவட்ட ..புரவலர் .ஆனந்தம், பெரியார் பெருந்தொண்டர் பி.சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றிய பின் நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

வரவேற்பு பொதுக்கூட்டத்தில் .தி.மு.. கொள்கை விளக்க அணி செயலாளர் .வந்தியத்தேவன், சிவகாசி நகர தலைவர் முருகன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம்,  மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், தி.மு..மாவட்ட துணை செயலாளர் அருண் மொழி, சிவகாசி நகர தி.மு.. செயலாளர் காளிராஜன், சி.பி.எம்.மாவட்ட பொருளாளர் சமுத்திரம், சி.பி.அய்.வட்டார செயலாளர் ஜீவா, வி.சி..தொகுதி செயலாளர் மனிதநேயன், .தி.மு.. நகர செயலாளர் இராஜேஷ், .தி.மு..மாவட்ட துணை செயலாளர் குமரேசன், திருத்தங்கல் நகர தி.மு.. பொறுப்பாளர் உதயசூரியன், தி.மு.. பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ஈசுவரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் சிவகாசி நகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் நன்றி கூறினார்.

கூட்டம் முடிந்ததும் இரவு தங்குவதற்கு மதுரை நோக்கிப் பயணமானார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


பார்ப்பனர்களுக்குச் சமமாக எல்லா இடங்களிலும் நம்ம மக்கள் வந்திருப்பதற்குக் காரணம் யார்?

நாங்கள்ளெல்லாம் சேரனைச் சேர்ந்தவன். சோழனைச் சேர்ந்தவன் என்று சொல்லியிருக்கிறோம். ஒரேயோரு மன்னன் கரிகாலனைத் தவிர மற்ற மன்னர்கள் சண்டை போட்டிருக்கானே தவிர, நம்மை பள்ளிக்கூடம் போக செய்யலையே? ஒரு நூற்றாண்டு வரையிலும் கூட, நம்ம மக்கள் பொதுப் போக்குவரத்துல போகமுடியாதுங்க. இதையெல்லாம் சட்டம் போட்டு மாத்துனது நீதிக்கட்சி ஆட்சிதான். நமக்கு சொத்து, சுகம் இருந்திருக்கு! ஆனால் படிப்பு இல்ல. நம்மை அப்படித் தான் வச்சிருந்தான். சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மனுதர்மம் சொல்லுது. எவ்வளவு கொடுமை?  இப்பொழுது பார்ப்பனர்களுக்குச் சமமாக எல்லா இடங்களிலும் நம்ம மக்கள் வந்திருப் பதற்குக் காரணம் யார்? தந்தை பெரியார் அல்லவா? இப்ப நீட், தேசிய புதிய கல்வி என்று கொண்டுவந்து மறுபடியும் பழையபடி மாத்தனுமுன்னு நினைக்கிறானே? விட்டுவிடலாமா? அதற்காகத்தான் இந்த நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய புதிய கல்வி எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணம். எங்கள் தலைவர் 89 வயதிலும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

- முனைவர் துரை.சந்திரசேகரன்

 

திராவிடம் வென்றே தீரும்!

நீட் மசோதாவை இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பியதோடு, முதலமைச்சரும் நேரில் சென்று அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆளுநரும் அனுப்பு கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அனுப்புகிறேன் என்று சொன்னால் அனுப்ப வேண்டியதுதானே? ஒரு ஆளுநர் பொய் சொல்லாமா? அனுப்பாதது குற்றமா? இல்லையா? இப்ப டில்லியில் என்ன சொல்றாங்க? இவரு என்ன அனுப்புறது? இவரையே அனுப்புங்க என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொல்கின் றனர். இவரு ஏன் இன்னும் அனுப்பல? அப்ப நம்ம பிள்ளைகள் படிக்கக்கூடாது. வடநாட்டு மாணவர்கள் படிக்கணும். அதானே? தமிழ்நாட்டுல உங்க வேலை நடக்காது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற திராவிட வீரன் வென்றே தீருவார். தமிழர் தலைவர் அவருக்கு தோன்றாத் துணையாக இருந்து இதில் நமக்கு வெற்றியைத் தேடித்தருவார்கள். திராவிடம் வென்றே தீரும்!

- முனைவர் அதிரடி .அன்பழகன்


No comments:

Post a Comment