சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்
அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
புதுடில்லி, ஏப்.9 சென்னை-சேலம் இடை யேயான பசுமைவழிச் சாலை திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8,301 கி.மீ. நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் சென்னை- பெங்களூரு இடையே 282 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகளில் 45 கி.மீ. நீளமுள்ள சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சென்னை- சேலம் இடையிலான 277 கிமீ நீளமுள்ள பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறிய அவர், வரும் 2024ஆம் ஆண்டிற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 22 அய்.பி.எஸ்.
அதிகாரிகள்மீது குற்ற வழக்குகள்
உள்துறை இணை அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஏப்.9 நாடு முழுவதும் 22 அய்.பி.எஸ். அதிகாரிகள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அவர் கூறுகையில், தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 22 அய்.பி.எஸ். அதிகாரிகள் மீது பல்வேறு சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.
2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் காவல் துறையினரிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண் ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்த நித் யானந்த் ராய், உத்தரப்பிரதேசத்தில் அய்.பி.எஸ். அதிகாரி ஒருவர் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவும் கூறினார்.
வெளிநாட்டு சிறைகளில் 8 ஆயிரம் இந்தியர்கள்
வெளிவிவகார இணை அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஏப்.9 வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என ஒன்றிய வெளிவிவகார இணை அமைச்சர் இன்று தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய வெளிவிவகார இணை அமைச்சர் முரளீதரன், அமைச்சகத்திடம் உள்ள தகவலின்படி, விசா ரணை கைதிகள் உள்பட வெளிநாட்டு சிறைகளில் உள்ள கைதிகளாக உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 278 என தெரிவித்து உள்ளார். இவற்றில் அய்க்கிய அரபு அமீரகத்தில் 1,480 இந்தியர்கள் கைதிகளாக உள்ளனர். இதற்கு அடுத்து சவுதி அரேபியாவில் 1,392 இந்தியர்களும், நேபாளத்தில் 1,112 இந்தியர்களும் கைதிகளாக உள்ளனர்.
சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள இந்தியர்கள் மீது போதைப் பொருள் கடத்தல், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாகிஸ்தானில் 701 இந்தியர்கள் அடைப்பட்டு உள்ளனர். குஜராத் பகுதியில் கடலில் மீன்பிடிக்க சென்று, பாகிஸ்தானிய அமைப்புகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது.
மார்ச் 14 முதல் ஏப்.6 வரை
நாடாளுமன்றத்துக்கு
2 நாள்தான் பிரதமர் வருகை
புதுடில்லி,ஏப்.9- பிரதமர் மோடியின் மக்க ளவை பதிவேட்டுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பங்கெடுப்பது என்பதே குறைவு தான். கடந்த முறையும் நாடாளுமன்றத்திற்கு மோடி வரு வதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.அப் போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோடியின் நாடாளுமன்ற வருகை பதிவேட்டின் விவரங்க ளோடு பதாகை ஏந்தி நாடாளுமன்றம் சென்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கதாகூர் தனது சுட்டுரைப் பதிவில்,
17 நாட்கள் நடைபெறும் மக்களவை உறுப் பினர் அமர்வில் பிரதமர் மோடி 2 நாள் தான் ஆஜரானார். 15 நாட்கள் காணவில்லை என அதில் தெரிவித்திருந்தார்.பிரதமர் மோடியின் வருகைப் பதிவு விவரங்களோடு காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதாபன் மற்றும் மாணிக்கதாகூர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தனர்.
No comments:
Post a Comment