திருவண்ணாமலை, ஏப்.1 திருவண்ணா மலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.3.2022 புதன் மாலை அய்ந்து மணி முதல் ஏழு முப்பது மணி வரை திரு வண்ணாமலை ஓட்டல் தமிழ்நாடு கருத் தரங்க அறையில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
மண்டலத் தலைவர் சடகோபன், மண்டல செயலாளர் பட்டாபிராமன், மாநில மகளிர் அணி அமைப்பாளர் தேன்மொழி, மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மூர்த்தி வரவேற்புரையாற்றினார்.
நீட் எதிர்ப்பு தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பிரச்சார பயணம் வரவேற்பு பொதுக்கூட்டம் 14.4.2022 அன்று திருவண்ணாமலையில் நடத்துவது சம்பந்தமாக கழகத் தலைவர் தமிழர் தலை வரை வரவேற்பது சம்பந்தமாக தோழர்கள் மாவட்ட அமைப்பாளர் காமராஜ், போளூர் ஜானகிராமன், போளூர் பன்னீர்செல்வம், போளூர் பலராமன், போளூர் சுந்தரமூர்த்தி, செங்கம் ராமன், வேட்டவலம் ஏழுமலை, வழக்குரைஞர் சங்கர், ஆசிரியர் அணி ராமஜெயம், கச்சிராப்பட்டு கிருஷ்ணன், மாணவர் கழக பொறுப்பாளர் ராம்குமார்,
புதிய சிறகுகள் சிவராஜ், திராவிட பழனி, வெங்கட்ராமன், வேலூர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். திருவண் ணாமலை பொதுக்கூட்டத்தை மாநாடு போல எழுச்சியோடும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் போட்டிப்போட்டு நன்கொடை அறிவித் தனர். 40 ஆயிரம் ரூபாய் அளவில் தொகை சேர்ந்தது மூ காமராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment