அரக்கோணத்தில் நடைபெற்ற பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டத்தில் நீட் எதிர்ப்பு பிரச்சார புத்தகத்தை ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நகர்மன்றத் தலைவர் லட்சுமிபாரி, நகர திமுக செயலாளர் ஜோதி, திமுக மாவட்டப் பொருளாளர் கண்ணையன் உள்ளிட்ட ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர். கூட்டத்தை சிறப்பாக நடத்திய லோகநாதன், எல்லப்பன், ஜீவன்தாஸ் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (23.4.2022)
திருப்பத்தூரில் தமிழர் தலைவரை சுமார் 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனத்தில் தோழர்கள் அணி திரண்டு வரவேற்று கூட்ட மேடைக்கு அழைத்துச் சென்றனர். (22.4.2022)
No comments:
Post a Comment