மயிலாடுதுறை, ஏப். 5- நீட் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு பயண பொதுக்கூட்டம் சீர்காழியில் 10.4.2022 அன்று நடைபெற இருப் பதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆ.ச. குணசேகரன், செயலா ளர் கி.தளபதிராஜ் ஆகி யோர் கடந்த ஒருவார காலமாக ஒன்றியப் பகு திகளில் சுற்றுப்பயணம் செய்து துண்டறிக்கைகள் வழங்கி நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 4.4.2022 மாலை மயிலாடுதுறை கடைவீதி யில் பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. பூம்பு கார் சட்டமன்ற உறுப் பினர் நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகி யோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுவிக்கப்பட் டது. குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இளங்கோவன், மாவட்ட துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர செயலாளர் க. அருள் தாஸ், துணைத்தலைவர் பூ.சி.காமராஜ், கொள்ளி டம் ஒன்றிய செயலாளர் பூ.பாண்டுரங்கன் ஆகி யோர் பங்கேற்றனர்.
Tuesday, April 5, 2022
Home
கழகம்
நீட் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் பயண பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய நகர வாரியாக துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம்!
நீட் புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் பயண பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றிய நகர வாரியாக துண்டறிக்கை வழங்கி பிரச்சாரம்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment