கீரமங்கலம், ஏப்.7- அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 2.4.2022 சனிக் கிழமை மாலை 5 மணியளவில், கீரமங்கலத்தில் மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடை பெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் சவுந்த ரராஜன் முன்னிலை வகித்தார்
கலந்து கொண்டோர்
ஒன்றிய தலைவர் மு.தேவேந் திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.யோகராசு, மாவட்ட இளைஞரணி தலைவர் ப. மகாராசா, மண்டல இளைஞரணிச் செயலாளர் க. வீரையா, பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ஆ. வேல்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம் தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர் சீரிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார் தத்துவங்களை கிராமங்கள் தோறும் கிராம பிரச் சாரக் குழுவில் தமிழ்நாடெங்கும் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தவருமான பெரியார் பெருந் தொண்டர் வல்லவாரி மு.இரணியன் மறைவுக்கு இக்கமிட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'நீட்' எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, பிரச்சாரப் பெரும் பயணம் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை தொடர் பிரச்சார பயணம் வருகிற 8-4-2022 வெள்ளி அன்று புதுக்கோட்டையில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது.
தீர்மானம் 3: தமிழர் தலைவர் அவர்கள் மேற்கொண்டுள்ள
பிரச்சாரப் பெரும் பயணத்தின் நோக் கங்களை பொதுமக்களுக்கு விளக் கும் விதமாக, அறந்தாங்கி கழக மாவட்ட முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப் பட்டது.
No comments:
Post a Comment